உள்ளூர் செய்திகள்

பாளையில் உள்ள ஒரு மையத்தில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வு எழுதியவர்களை படத்தில் காணலாம்.

நெல்லை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பொறியியல் பணி தேர்வை 57 சதவீதம் பேர் மட்டுமே எழுதினர்

Published On 2022-07-02 09:32 GMT   |   Update On 2022-07-02 09:32 GMT
  • நெல்லை, பாளை வட்டத்தில் உள்ள 17 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
  • தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 2,079 பேர் தேர்வு எழுத வரவில்லை.

நெல்லை:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையத்தால் நெல்லை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது.

17 மையங்கள்

நெல்லை, பாளை வட்டத்தில் உள்ள 17 தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை எழுதுவதற்காக 4,831 பேர் விண்ணப்பித்திருந்தனர்.தேர்வையொட்டி மையங் களில் கொரோனா முன்னெச் சரிக்கை நடவடிக் கைகள் செய்யப்பட்டி ருந்தது.

இன்று காலை தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்தனர். அவர்கள் தேர்வு மையத்திற்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

57 சதவீதம் பேர் எழுதினர்

இந்த தேர்வினை 2,752 பேர் மட்டுமே எழுதினார்கள். இது 57 சதவீதம் ஆகும். தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 2,079 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வை கண்காணிக்க தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் நிலையில் 5 சுற்றுக்குழு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தேர்வு மையங் களை கண்காணித்தனர்.

மேலும் தேர்வு மைய நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News