உள்ளூர் செய்திகள்

சாய்ந்த நிலையில் காணப்படும் மின்கம்பம்.

பாவூர்சத்திரம் நான்கு வழி சாலை அருகே சாய்ந்த நிலையில் உயர் அழுத்த மின் கம்பம்- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-09-01 09:44 GMT   |   Update On 2022-09-01 09:44 GMT
  • பாவூர்சத்திரம் அருகே சாலையின் குறுக்கே இருந்த குடிநீர் பைப்புகள் மற்றும் மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வந்தன.
  • கனமழையின் காரணமாக அங்குள்ள மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் காணப்படுகிறது.

தென்காசி:

நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரம் அருகே சாலையின் குறுக்கே இருந்த குடிநீர் பைப்புகள் மற்றும் மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் சிவகாமிபுரம் விலக்கு அருகே உயர் அழுத்த மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை திடீரென பெய்த கனமழையின் காரணமாக அங்குள்ள மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் காணப்படுகிறது.

போக்குவரத்து மிகுந்த சாலை என்பதாலும் அருகில் சிறிய மின்கம்பங்கள் இருப்பதாலும் பெரும் விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்பாக பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை சரி செய்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News