உள்ளூர் செய்திகள்

கால்பந்து போட்டி நடைபெற்ற போது எடுத்த படம்.


விளாத்திகுளம் அருகே விபத்தில் பலியான விளையாட்டு வீரர் நினைவாக கால்பந்து போட்டி - நண்பர்கள் நடத்தினர்

Published On 2022-08-24 08:59 GMT   |   Update On 2022-08-24 08:59 GMT
  • விளாத்திகுளம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த தடகள மற்றும் விளையாட்டு வீரரான விஜய் என்ற மாணவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார்.
  • அவரது நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவரின் நினைவு தினத்தன்று சகநண்பர்கள் சார்பில் மாரத்தான், கபடி, கால்பந்தாட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு விளையாட்டின் மூலம் உயிரிழந்த தங்களின் நண்பன் “தடகள வீரர்” விஜய்க்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த தடகள மற்றும் விளையாட்டு வீரரான விஜய் என்ற மாணவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார்.

அவரது நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவரின் நினைவு தினத்தன்று சகநண்பர்கள் சார்பில் மாரத்தான், கபடி, கால்பந்தாட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு விளையாட்டின் மூலம் உயிரிழந்த தங்களின் நண்பன் "தடகள வீரர்" விஜய்க்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு அவரது நினைவு தினத்தை முன்னிட்டு விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், கால்பந்து போட்டியை நடத்தினர். மாவட்ட அளவில் நடைபெற்ற இப்போட்டியில் 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடினர். இறுதி ஆட்டத்தில் நாசரேத் பகுதியை சேர்ந்த அணியினரும் - விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி அணியினரும் மோதி கொண்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நாசரேத் அணி முதல் பரிசை தட்டிச் சென்றது. தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் விஜய் நினைவுக்கோப்பை வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News