உள்ளூர் செய்திகள்

ஓமலூர் அருகே போலி பட்டா தயாரித்து அரசு நிலம் முறைகேடு

Published On 2022-07-11 10:03 GMT   |   Update On 2022-07-11 10:03 GMT
  • அரசுக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தை ஆக்கிரமிப்பு.
  • ஆக்கிரமிப்பு செய்து பச்சனம்பட்டி ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வரும் பெண் ஒருவர் போலியாக பட்டா தயார் செய்து வீடு கட்டி வருகிறார்.

சேலம்:

சேலம் மேற்கு மாவட்ட த.மா.கா. தொழிற்சங்க தலைவர் பி.கே.சின்னப்பன் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- ஓமலூர் வட்டம் பச்சனம்பட்டி கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தை ஆக்கிரமிப்பு செய்து பச்சனம்பட்டி ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வரும் பெண் ஒருவர் போலியாக பட்டா தயார் செய்து வீடு கட்டி வருகிறார்.

இதனால் பொதுமக்களுக்கு விளையாட்டு மைதானம் இல்லாமல் அவதிப்பட்டு வருவது தொடர்பாக கோவிந்தராஜ் என்பவர் ஓமலூர் வட்டாட்சியரிடமும் கோட்டாட்சியர் உட்பட 5 பேரிடம்மனு கொடுத்தும் இதுவரை அந்த ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தப்படவில்லை.

இது குறித்து சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் நான் கேட்டால் அவர் அவதூறாக பேசுகிறார். எனவே இதுபற்றி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News