உள்ளூர் செய்திகள்

என்ஜினீயரிங் சேர்க்கை முதல் சுற்று கலந்தாய்வு கல்லூரிகளில் கட்டணம் செலுத்த இன்று கடைசி நாள்

Published On 2022-09-22 10:15 GMT   |   Update On 2022-09-22 10:15 GMT
  • தமிழ்நாடு அரசு என்ஜினீயரிங் கல்லூரி உள்பட 431 என்ஜினீயரிங் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு (பி.இ, பி.டெக், பி.ஆர்க். பி.பிளான்) ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் உள்ளன.
  • இவற்றை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது.

சேலம்:

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் சேலத்தில் உள்ள தமிழ்நாடு அரசு என்ஜினீயரிங் கல்லூரி உள்பட 431 என்ஜினீயரிங் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு (பி.இ, பி.டெக், பி.ஆர்க். பி.பிளான்) ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது.

முதல் சுற்றில் கல்லூரிகள் ஒதுக்கப்பட்ட மாணவர்களுக்கு தற்காலிக சேர்க்கை கடிதம் கடந்த 15-ந்தேதி இணையதளவழியில் வழங்கப்பட்டது. இக்கடிதம் பெற்றவர்கள் 7 நாட்களில் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு சென்று கட்டணம் செலுத்தி சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் மாணவரின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு, அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டு, அடுத்த சுற்று கலந்தாய்வில் சேர்க்கப்படும்.

இன்று கடைசி நாள்

அதன்படி முதல் சுற்றில் சேர்க்கை கடிதம் பெற்ற மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கான கால அவகாசம் இன்றுடன் (22-ந்தேதி) நிறைவு பெறுகிறது.

எனவே, மாணவர்கள் கல்லூரிகளிலோ அல்லது அரசு உதவி மையங்களிலோ கட்டணம் செலுத்தி சேர்க்கையை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அரசுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News