உள்ளூர் செய்திகள்

எழும்பூர் அருங்காட்சியகத்தில் காந்தி சிலையை மு.க.ஸ்டாலின் திறந்தார்

Update: 2022-08-15 08:57 GMT
  • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காந்தி சிலையை திறந்து வைத்தார்.
  • அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ. வேலு, சேகர்பாபு, தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், அரசு செயலாளர் மகேசன் காசிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

சென்னை:

தமிழக அரசின் சார்பில் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் காந்தியடிகளின் முழு உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

இந்த சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காந்தி சிலையை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ. வேலு, சேகர்பாபு, தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், அரசு செயலாளர் மகேசன் காசிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News