உள்ளூர் செய்திகள்

தச்சை பகுதியில் சுகாதார ஆய்வாளர் பெருமாள் வீடு, வீடாக தேசியக்கொடி வினியோகித்த காட்சி.

75-வது ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி நெல்லையில் வீடு வீடாக தேசியக்கொடிகள் வினியோகம்

Published On 2022-08-09 09:31 GMT   |   Update On 2022-08-09 09:31 GMT
  • அனைவரும் தங்களது வீடுகள் முன்பு தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
  • மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் வீடு வீடாக தேசியக்கொடி வழங்கப்பட்டு வருகிறது.

நெல்லை:

75-வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

தேசியக்கொடி

பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகள் முன்பு தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வீடு, வீடாக...

இதற்கிடையே நெல்லை மாநகரப் பகுதியில் பொது மக்களுக்கு மாநகராட்சி சார்பில் கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் வீடு வீடாக தேசியக்கொடி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று தச்சை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார ஆய்வாளர் பெருமாள் முன்னிலையில் 1,2,3,12,13,14,30 ஆகிய வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று தேசிய கொடிகள் வழங்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News