உள்ளூர் செய்திகள்

தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தில் நுகர்வோர் மன்றம் கூட்டம் தலைமை அஞ்சலக முதுநிலை அஞ்சலக தலைவர் எஸ்.அருள்தாஸ் தலைமையில் நடைபெற்றது.

தஞ்சை தலைமை அஞ்சலகத்தில் நுகர்வோர் மன்ற கூட்டம்

Published On 2022-06-28 10:14 GMT   |   Update On 2022-06-28 10:14 GMT
  • கூட்டத்தில் மன்றத்தின் உறுப்பினர்களாக இருக்கின்ற வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு தலைமை அஞ்சலக சேவைகள் பற்றிய கருத்துக்களை தெரிவித்தனர்.
  • ஆதார் சேவைக்கு வருகின்ற வாடிக்கையாளர்கள் வசதியாக அமர்ந்து சேவை பெறுவதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுத்தமைக்கு பாராட்டு.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தில் 30-6-2022 வரையிலான முதல் காலாண்டுக்குரிய நுகர்வோர் மன்றம் கூட்டம் தலைமை அஞ்சலக முதுநிலை அஞ்சலக தலைவர் எஸ்.அருள்தாஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மன்ற த்தின் உறுப்பினர்களாக இருக்கின்ற முக்கிய வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு தஞ்சாவூர் தலைமை அஞ்சலக சேவை பற்றி தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.குறிப்பாக தஞ்சை தலைமை அஞ்சலக த்தின் தோற்றத்தில் ஏற்பட்டு ள்ள மாற்றத்தையும், வாடி க்கை யாளர்களுக்கு வழங்கப்படுகின்ற கனி வான சேவையையும் பாராட்டினர்.

ஆதார் சேவைக்கு வருகி ன்ற வாடிக்கையாளர்கள் வசதியாக அமர்ந்து சேவை பெறுவதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுத்த தலைமை அஞ்சலக நிர்வாகத்தை வெகுவாக பாராட்டினார்கள்.மேலும் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்ப கூடிய பார்ச ல்களை தலைமைஅஞ்சல கத்திலேயே சிறப்பாக பேக்கிங் செய்துமற்றும் பதிவு செய்து அனுப்பும் சேவையை பாராட்டினார்கள். முடிவில் அஞ்சலக ஊழியர் எஸ்.சித்ரா நன்றி கூறினார்.

Tags:    

Similar News