உள்ளூர் செய்திகள்

சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி சி.ஐ.டி.யூ. ஆர்ப்பாட்டம்

Published On 2022-06-24 10:09 GMT   |   Update On 2022-06-24 10:09 GMT
  • அரசு விரைவு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை நியமிக்கும் அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

தஞ்சாவூர்:

தஞ்சையில் உள்ள அரசு விரைவு போக்குவர த்துக்கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு சி.ஐ.டியூ. மாநில செயலாளர்ஜெயபால் தலைமை தாங்கினார். முன்னாள் நகர செயலாளர் குருசாமி, மாவட்ட துணை த்தலைவர் அன்பு,ஆட்டோ ஓட்டுனர்சங்க நகர செயலா ளர்ராஜா, நிர்வாகிகள் வடிவேலன், மில்லர்பிரபு, வெங்கடேசன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை செயலா ளர் செங்குட்டுவன் வர வேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் ராணுவ த்தில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை நியமிக்கும் அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி கோஷங்கள் எழுப்ப ப்பட்டன. இதில் சி.ஐ.டி.யூ. போக்குவரத்துக்கழக ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News