உள்ளூர் செய்திகள்

சதுரங்க போட்டியில் பங்கேற்ற அரசு பள்ளி மாணவ-மாணவிகள்.

பாளை வ.உ.சி. மைதானத்தில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சதுரங்க போட்டி

Published On 2022-06-24 09:31 GMT   |   Update On 2022-06-24 09:31 GMT
  • நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவிகளுக்கு பாளை வ.உ.சி. மைதானத்தில் இன்று சதுரங்க போட்டி நடைபெற்றது.
  • 200 நாடுகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ள செஸ் ஒலிம்பியாட் திருவிழா முதல்முறையாக சென்னையில் நடைபெற உள்ளது.

நெல்லை:

200 நாடுகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ள செஸ் ஒலிம்பியாட் திரு விழா முதல்முறையாக சென்னையில் நடைபெற உள்ளது.

இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பார்வை யாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் நெல்லை மாவட்ட தனியார் பள்ளிகளில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு சதுரங்க போட்டிகள் நடைபெற்று அதில் சிறப்பாக விளையாடியவர்கள் சென்னையில் நடைபெறும் போட்டியில் பார்வையாளராக கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களையும், இதேபோல் சதுரங்க போட்டி வைத்து பார்வையாளராக அழைத்து செல்ல வேண்டும் என மாவட்ட கலெக்டர் விஷ்ணு அறிவுறுத்தினார்.

அதன்படி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவிகளுக்கு பாளை வ.உ.சி. மைதானத்தில் இன்று சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள 125 மாணவ - மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதில் 110 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். சதுரங்க போட்டியில் சிறப்பாக விளையாடும் மாணவ-மாணவிகள் சென்னை ஒலிம்பியாட் போட்டியில் பார்வை யாளராக பங்கேற்க அழைத்து செல்லப்படுவார்கள்.

Tags:    

Similar News