உள்ளூர் செய்திகள்

இரும்பு கம்பி திருடிய சிறுவன் கைது

Update: 2022-08-15 10:14 GMT
  • ராஜராஜ சோழன் சிலை நடைபாதை அமைந்துள்ள பகுதியில் 70 கிலோ இரும்பு கம்பி திருடு போயிருந்தது.
  • 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை பெரிய கோவில் அருகே ராஜராஜ சோழன் சிலை நடைபாதை அமைந்துள்ள பகுதியில் 70 கிலோ இரும்பு கம்பி திருடு போயிருந்தது. இது குறித்து தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் 15 வயது சிறுவன் இரும்பு கம்பிகளை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.

Tags:    

Similar News