உள்ளூர் செய்திகள்

ரத்ததான முகாம் நடைபெற்றபோது எடுத்தபடம்.


தென்காசி அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம்

Published On 2022-07-04 09:00 GMT   |   Update On 2022-07-04 09:00 GMT
  • மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் ரத்த தானம் வழங்கிய மருத்துவர்களுக்கும் , மருத்துவ சங்கத்தினருக்கும் பாராட்டி பேசினார்.
  • ஏற்பாடுகளை ரத்த வங்கி மருத்துவர் பாபு செய்திருந்தார்.

தென்காசி:

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இந்திய பல் மருத்துவ சங்கம் சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்திய பல் மருத்துவ சங்கத்தின் தென்காசி மாவட்ட நிறுவனர் மருத்துவர் மதிமாறன் ரத்ததானம் பற்றியும், அதன் அவசியம் குறித்தும் விளக்கினார். இந்திய பல் மருத்துவ சங்கத்தின் தலைவர் மருத்துவர் கதிரேசன் மற்றும் மருத்துவர்கள் காளிதாசன், ஹரிச்சந்திர ராஜா, நஸீருத்தீன், சுகன்யா, அல்போன்ஸ், செய்யது முகம்மது தமீம் ஆகியோர் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.

முகாமை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின், மூத்த பல் மருத்துவர் லதா ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஏற்பாடுகளை ரத்த வங்கி மருத்துவர் பாபு செய்திருந்தார்.

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் ரத்த தானம் வழங்கிய மருத்துவர்களுக்கும் , மருத்துவ சங்கத்தினருக்கும் பாராட்டி பேசினார். மேலும் ரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் நஸீருத்தீன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News