உள்ளூர் செய்திகள்

கனல் கண்ணன் கைதை கண்டித்து சேலத்தில் ஆர்ப்பாட்டம் பா.ஜ.க. முன்னாள் தலைவர் உள்பட  27 பேர் கைது

Published On 2022-08-16 09:50 GMT   |   Update On 2022-08-16 09:50 GMT
  • கனல் கண்ணன் திருச்சி நடந்த கூட்டத்தில் பெரியார் சிலைக்கு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி இருந்தார்.
  • கனல் கண்ணனை கைது செய்யப்பட்டதை கண்டித்து இந்து முன்னணியினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சேலம்:

திரைப்பட சண்டை பயிற்சியாளரும், இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணன் திருச்சி நடந்த கூட்டத்தில் பெரியார் சிலைக்கு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி இருந்தார். இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கனல் கண்ணனை போலீசார் நேற்று புதுவையில் வைத்து கைது செய்தனர். கனல் கண்ணனை கைது செய்யப்பட்டதை கண்டித்து இந்து முன்னணியினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கனல் கண்ணன் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்ய கோரியும் இந்து முன்னணி சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தடையை மீறி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி தலைவர் சந்தோஷ் குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து விடுதலை செய், விடுதலை செய் கனல் கண்ணனை விடுதலை செய் என்பது போன்ற கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சந்தோஷ் குமார் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் கோபிநாத் உள்பட 27 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News