உள்ளூர் செய்திகள்

நெல்லையில் சுற்றுச்சூழல் சுற்றுலா செல்ல 30-ந்தேதி வரை தடை

Published On 2022-07-25 10:13 GMT   |   Update On 2022-07-25 10:13 GMT
  • இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • அகஸ்தியர் அருவி போன்றவற்றுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கல்லிடைக்குறிச்சி:

பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந்தேதி நடைபெறுகிறது.

இதனையொட்டி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் சுற்றுச்சூழல் சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலா தலங்களான மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை தேயிலை தோட்டம், குதிரை வெட்டி ஓய்வு இல்லம், முண்டந்துறை புலிகள் காப்பகம் மற்றும் அகஸ்தியர் அருவி போன்றவற்றுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த தகவலை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப் பிரியா அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News