உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டவர்கள்.  

தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் விழிப்புணர்வு பேரணி

Published On 2022-07-29 08:53 GMT   |   Update On 2022-07-29 08:53 GMT
  • குடும்பநலத்துறை துணை இயக்குனர் மருத்துவர் ராமநாதன் வரவேற்று பேசினார்.
  • செவிலியர் பயிற்சி மாணவ-மாணவிகளுக்கு உலக மக்கள் தொகை தினம் பற்றிய விழிப்புணர்வு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது.

தென்காசி:

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக மக்கள் தொகை தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் மருத்துவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார், தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ஜெஸ்லின் மற்றும் உறைவிட மருத்துவர் ராஜேஷ் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் குடும்பநலத்துறை துணை இயக்குனர் மருத்துவர் ராமநாதன் வரவேற்று பேசினார். இணை இயக்குனர் மருத்துவர் கிருஷ்ணன் தலைமை உரை ஆற்றினார். மகப்பேறு மருத்துவர் புனிதவதி, கடையநல்லூர் மருத்துவ அலுவலர் அனிதா, பாலின மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் கீதா உலக மக்கள் தொகை தினம் பற்றிய கருத்துரை வழங்கினார்கள்.

இவர்களுடன் மூத்த மருத்துவர் லதா கலந்து கொண்டார். மருத்துவமனை வளாகத்தினுள் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மேலும் செவிலியர் பயிற்சி மாணவ-மாணவிகளுக்கு உலக மக்கள் தொகை தினம் பற்றிய விழிப்புணர்வு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது, அதில் சிறப்பாக பேசிய மாணவ மாணவிகளுக்கு பரிசு கேடயமும் , சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. மக்கள் கல்வி மற்றும் தகவல் அலுவலர் முருகன் தொகுத்து வழங்கினார். மாவட்ட விரிவாக்க கல்வி அலுவலர் டேவிட் ஞானசேகர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News