என் மலர்

  நீங்கள் தேடியது "rally"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அனைவரும் பேரணியாக சென்று ஊரணிபுரம் கடைத்தெருவில் சங்க கொடியினை ஏற்றினார்.
  • மாவட்ட அளவில் செயல்பட தீர்மானிக்கப்பட்டு அதன் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

  திருவோணம்:

  தஞ்சை மாவட்டம் திருவோணம் வட்டார விவசாயிகள் நலச்சங்கத்தின் 2 வது வட்டார மாநாடு மற்றும் பேரணி ஊரணிபுரத்தில் நடைபெற்றது.

  வட்டார விவசாய நல சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜ், தலைமை தாங்கினார். மேலும் சங்க செயலாளர் வி.கே.சின்னத்துரை வரவேற்று ஸ்தாபனம் வேலை அறிக்கையினை முன்மொழிந்து பேசினார். பொருளாளர் துரைராஜ், நிர்வாகிகள் வ.பெ.தங்கராசு, அன்பழகன், பெரியசாமி, சி.துரைராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  நிகழ்ச்சியில் திருச்சி (பொ.ப.து) நீர்வளத்துறையின் செயற்பொறியாளர் முருகேசன், மாநாட்டு பேரணியை துவக்கி வைத்து பேரணியாக சென்று ஊரணிபுரம் கடைத்தெருவில் சங்க கொடியினை ஏற்றினார். தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குனர், ஜெஷ்டின், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் இளங்கண்ணன், வழக்க றிஞர் அ.ராமகிரு ஷ்ணன், அகில இந்திய எல்.ஐ.சி.முகவர் சங்க பட்டுக்கோட்டை கிளை செயலாளர் பஞ்சாட்சரம், மற்றும் நிர்வாகி தர்மராஜ், மாவட்ட கவுன்சிலர் திருஞானசம்பந்தம், பட்டுக்கோட்டை முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் பாரதி, அக்கரைவட்டம் ஊராட்சி மன்ற தலைவர். ஆர், கண்ணையன், டெல்டா இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் முத்துராசு, மற்றும் அதன் நிர்வாகிகள் சரவணன், முத்து, முருகேசன்.

  தஞ்சை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் போராட்டக்குழு தலைவர் செங்குட்டுவன், திருவோணம் வட்டார வாடகை பாத்திர சங்கத்தின் தலைவர் செல்வம், சிபிஐ மாவட்ட க்குழு உறுப்பினர் ராமசாமி, ஒன்றிய செயலாளர் கருப்பையா, விவசாயிகள் சங்க தலைவர் சவுந்தர்ராஜன், தங்கராஜ், சாமி.மனோகரன், சீனிவா சன், கே.ஆர்.முருகே சன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மரக்கன்றுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினர்.

  மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருவோணம் வட்டார அளவில் செயல்பட்டு வந்த இச்சங்கத்தினை தஞ்சை மாவட்ட அளவில் செயல்பட தீர்மானிக்கப்பட்டு அதன் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக வி.கே.சின்ன துரை நன்றி கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர், எஸ்.பி., மேயர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பேரணியை தொடங்கி வைத்தனர்.
  • 75 வகை மரக்கன்றுகள் நடப்பட்டன.

  திருப்பூர் :

  நாட்டின், 75வது சுதந்திர தின பவள விழாவையொட்டி திருப்பூரில் இன்று பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்ற பிரம்மாண்ட சுதந்திர தினவிழா பேரணி நடைபெற்றது. திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு, இன்று காலை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கலெக்டர் வினீத், மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன், எஸ்.பி.,சஷாங் சாய், மேயர் தினேஷ்குமார் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பேரணியை தொடங்கி வைத்தனர். முன்னதாக, 75 வகை மரக்கன்றுகள் நடப்பட்டன.

  அலங்கார ஊர்தி, ஊர்க்காவல் படையினரின் மிடுக்கான பேண்ட் வாத்திய அணிவகுப்பு,தேசியக்கொடி ஏந்திய குதிரை வீரர்கள் அணிவகுப்பு, பள்ளி மாணவர்களின் ஸ்கேட்டிங், மராத்தான் வீரர்களின் மித ஓட்டம், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அணிவகுப்பு, தொழில் அமைப்பினரின் அணிவகுப்பு, பொதுநல அமைப்பினர், தன்னார்வ அமைப்பினர், லயன்ஸ் மற்றும் ரோட்டரி அமைப்பினரின் சீரான அணிவகுப்புடன் பல்வேறு தரப்பினரும் பிரம்மாண்ட பேரணியில் பங்கேற்றனர். பேரணியில் பல அடி நீளமுடைய பிரம்மாண்ட தேசிய கொடியை மாணவர்கள் கொண்டு சென்றனர். இது பார்ப்போரை பிரமிக்க வைத்தது.

  4 இடங்களில், பவளக்கும்மியாட்டம், பெருஞ்சலங்கையாட்டம், பரத நாட்டியம் போன்ற, மேடை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பேரணி பழைய பஸ் நிலைய மேம்பாலம், வளர்மதி பாலம், பார்க்ரோடு வழியாக, நஞ்சப்பா பள்ளியை சென்றடைந்தது. பள்ளி வளாகத்தில் பேரணியை வரவேற்கும் வகையில் தேசப்பற்று கலை நிகழ்ச்சிகளும், தன்னம்பிக்கை பேச்சாளர் பாரதி பாஸ்கரின் சுதந்திர தின எழுச்சி சொற்பொழிவும் நடைபெற்றது. வானுயர பறக்கும் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மூவர்ண பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன. சுதந்திர தின பவளவிழா உறுதிமொழி ஏற்பு, தேசிய கீதத்துடன் விழா நிறைவு பெற்றது. தேசப்பற்றை நெஞ்சில் சுமந்தபடி, தேசியக்கொடியை கையில் ஏந்தியபடி, வீரர், வீராங்கனைகளும், எதிர்கால சந்ததியினரும் பேரணியில் பங்கேற்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo

  திருப்பூர் :

  75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசப்பற்றை பறைசாற்றும் விதமாக திருப்பூர் கூலிபாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட பேரணி நடந்தது. பேரணிக்கு பள்ளியின் தாளாளர் ஆண்டவர் ஏ.ராமசாமி தலைமை தாங்கினார்.

  மேலும் 11-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நாடு முழுவதும் அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததை முன்னிட்டு, மாணவ-மாணவிகள் தேசிய கொடியை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில் பள்ளி நிர்வாகத்தினர், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பேரணியின் முடிவில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பேரணியில் ஆயிரம் பேர்கள் கலந்து கொண்டனர்.
  • தாலுகா அலுவலகலத்தில் இருந்து புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று வாசகசாலை பஜார் மற்றும் புதிய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் சென்று மீண்டும் தாலுகா அலுவலகத்தை வந்தடைந்தது.

  சாத்தான்குளம்:

  சாத்தான்குளத்தில் 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் பிரம்மாண்டமான பேரணி நடைபெற்றது.

  இன்று காலை சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியை தாசில்தார் தங்கையா கொடியேற்றி தொடங்கி வைத்தார்.

  பேரணியில் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெயபதி, பேரூராட்சி மன்ற தலைவர் ரெஜினா ஸ்டெல்லா பாய், சுகாதாரத்துறை ஆய்வாளர் கிரிஸ்டோபர் செல்வதாஸ், சாத்தை ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  சாத்தான்குளம் வட்டாரத்தைச் சேர்ந்த கல்லூரி மற்றும் அனைத்து பள்ளிகளின் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு சுமார் 400 மீட்டர் நீளமுள்ள பிரம்மாண்டமான தேசிய கொடியை பேரணியாக கொண்டு சென்றனர்.

  தாலுகா அலுவலகலத்தில் இருந்து புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று வாசகசாலை பஜார் மற்றும் புதிய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் சென்று மீண்டும் தாலுகா அலுவலகத்தை வந்தடைந்தது.

  இப்பேரணியில் ஆயிரம் பேர்கள் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாணவர்கள் சார்பில் ‘வேண்டாம் போதை’ விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
  • பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணியை சப்-இன்ஸ்பெக்டர் கவிதா தொடங்கி வைத்தார்.

  தென்காசி:

  பாவூர்சத்திரத்தில் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் 'வேண்டாம் போதை' விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

  500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணியை சப்-இன்ஸ்பெக்டர் கவிதா தொடங்கி வைத்தார்.

  மாணவர்கள் போதைப் பொருட்கள் ஒழிப்பு தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் பேரணி நடைபெற்றது
  • 75ம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்ட நடந்தது

  கரூர்:

  கரூரில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் பேரணியாக சென்றனர். 75ம் ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, கரூர் மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகள் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் அவினாசிலிங்கம் தலைமையில் கரூர் ஆசாத் பூங்காவிலிருந்து ஜவஹர் பஜார் வழியாக காமராஜர் சிலை வரை நேற்று பேரணியாக சென்றனர். இதில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்த பேரணியில் பான் செக்கர்ஸ் கல்லூரி மாணவிகள் ஏராளமானார் கலந்து கொண்டு பேரணியாக புறப்பட்டனர்.
  • பேரணியானது தஞ்சை பெரிய கோவில் முன்பு நிறைவடைந்தது.

  தஞ்சாவூர்:

  தஞ்சை மாநகராட்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம், தஞ்சை பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி ஆகியவை இணைந்து 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைவரது வீட்டிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

  தஞ்சை ரயில் நிலையம் முன்பு தொடங்கிய இந்த பேரணியை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

  இந்த பேரணியில் பான் செக்கர்ஸ் கல்லூரி மாணவிகள் ஏராளமானார் கலந்து கொண்டு பேரணியாக புறப்பட்டனர். பேரணியானது தஞ்சை பெரிய கோவில் முன்பு நிறைவடைந்தது.

  அப்போது பெரிய கோவில் முன்பு அனைவரும் கைகளை தேசியக் கொடியை ஏந்தியவாறு சுதந்திரத்தை பேணி பாதுகாக்க வேண்டும், அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு சுதந்திர தின விழிப்புணர்வு உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

  இந்த நிகழ்ச்சியில் பான் செக்கர்ஸ் கல்லூரி இயக்குனர் அருட்சகோதரி டெரன்ஸியா மேரி, கல்லூரி முதல்வர் முனைவர் காயத்ரி, நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தழகி, தஞ்சை செஞ்சுருள் சங்க பொருளாளர் முத்துக்குமார், மாநகராட்சி பொறியாளர் ஜெகதீசன், நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், உதவி பொறியாளர்கள் ரமேஷ், கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் சந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 75-வது சுதந்திர தினவிழாவையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
  • சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களை பற்றி பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

  நெல்லை:

  75-வது சுதந்திர தினவிழாவையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

  மேலும் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களை பற்றி பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

  நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் கடந்த 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அதன்படி இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

  பல்கலைக்கழகம் முன்பு இருந்து தொடங்கிய பேரணியை துணைவேந்தர் பிச்சுமணி தொடங்கி வைத்தார். பேரணியில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ராணி அண்ணா மகளிர் கல்லூரி வரை சென்ற பேரணி மீண்டும் பல்கலைக்கழகம் வந்தடைந்தது.

  தொடர்ந்து 1800-ம் ஆண்டு முதல் சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டு வரை சுதந்திரத்திற்காக பாடுபட்ட வெளி உலகிற்கு தெரியாத பல்வேறு தலைவர்களின் புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சி நடைபெற்றது.

  இதற்காக 93 பேனர்களில் தலைவர்க–ளின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தது. மேலும் தேசப்பற்று குறித்து போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 19 கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

  இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக பேராசிரியர் வெங்கடேஷ் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடையநல்லூரில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்
  • கடையநல்லூர் நகர் முழுவதும் முக்கிய வீதி வழியாக சென்று போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி பேரணியாக சென்றனர்.

  கடையநல்லூர்:

  கடையநல்லூரில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மாணவி மற்றும் மாணவர்களிடையே கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் ஏற்படும் ஆபத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜா புளியங்குடி டி.எஸ்.பி. அசோக் ஆகியோரின் உத்தரவின் பேரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

  இந்நிகழ்ச்சிக்கு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜின்னி இவாஞ்சலின் ஜோஸ் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மங்களதுரை ஆகியோர் தலைமை தாங்கினார். உதவி தலைமையாசியர் ராஜன்,மற்றும் ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சப் இன்ஸ்பெக்டர் கனகராஜன் கலந்துகொண்டு கஞ்சா, மது, சிகரெட் உள்ளிட்ட போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள், அதன் மூலம் சமூகத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் பற்றி மாணவரிடம் எடுத்துரைத்தார்.

  தொடர்ந்து மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். கடையநல்லூர் நகர் முழுவதும் முக்கிய வீதி வழியாக சென்று போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி பேரணியாக சென்றனர். இதுபோன்று கடையநல்லூர் பேட்டை பகுதி முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பேட்டை முழுவதும் பேரணியாக சென்று போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு, போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அரசு கூறியிருந்தது.
  • தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட போதை பொருள் விழிப்புணர்வு பேரணியை சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன். மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

  தூத்துக்குடி:

  தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு, போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அரசு கூறியிருந்தது.

  பேரணி

  இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட போதை பொருள் விழிப்புணர்வு பேரணியை சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன். மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

  நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணவன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணப்பிராண், மாநில தி.மு.க. மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வின், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார்ரூபன், மாவட்ட கவுன்சிலர் செல்வக்குமார், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் ராமஜெயம், விவசாய அணி செயலாளர் ஆஸ்கர், தொண்டரணி செயலாளர் வீரபாகு, வழக்கறிஞர் அணி துணை செயலாளர் ரகுராமன், மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் ரெங்கசாமி, ஒன்றிய செயலாளர்கள் மாடசாமி, ஜெயக்கொடி, சுப்பிரமணி, அரசு வக்கீல் பூங்குமார், மாவட்ட கல்வி அலுவலர் பாலதாண்டாயுதம், மாவட்ட உணவு வழங்கல் பாதுகாப்பு நியமண அலுவலர் மாரியப்பன், சுகாதரார பணிகள் இணை இயக்குநர் பொற்செல்வன், மருத்துவ கல்லூரி இணை இயக்குநர் பொன்இசக்கி, மருத்துவ கல்லூரி பொறுப்பு டீன் ராஜேந்திரன், தாசில்தார் செல்வகுமார், கோட்டாச்சியர் சிவசுப்பிரமணியன், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ஸ்டாலின், மற்றும் மணி, செந்தில்குமார், அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி விழிப்புணர்வு பேரணிக்கு முன்பாக தப்பாட்டம் கலைநிகழ்ச்சியும் சிறுவர், சிறுமிகளின் சிலம்பாட்டத்துடன் சென்ற ஊர்வலத்தில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் முக்கிய வீதிகள் வழியாக சென்று மருத்துவ கல்லூரி மருத்துவமணையில் ஊர்வலம் நிறைவு பெற்றது. பின்னர் அங்கு நடைபெற்ற கருத்தரங்கில் அமைச்சர்கள், உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 75-ம்ஆண்டு சுதந்திர தினவிழாவை கொண்டாடும் வகையில் தேசிய கொடியை ஏந்தி சென்றனர்.
  • பேரணிநகரமுக்கிய வீதிகளின்வழியாக சென்று பஸ்நிலையம் அருகில் இருக்கும். சுதந்திரபோராட்ட தியாகி வாஞ்சிநாதன் சிலை முன்பு வந்தடைந்தது.

  செங்கோட்டை:

  செங்கோட்டையில் பாரதீயஜனதாகட்சி நகர இளைஞர் அணி சார்பில் 75-ம்ஆண்டு சுதந்திர தினவிழாவை கொண்டாடும் வகையில் அனைவரும் கையில் தேசிய கொடியை ஏந்தி நடைபேரணி சென்றனர்.

  இந்த பேரணி தாலூகாஅலுவலகம் முன்பு இருந்து புறப்பட்டது. இளைஞர்அணித்தலைவர் வீரசிவா தலைமை தாங்கினார்.

  பாரதிய ஜனதா கட்சி நகர தலைவர் வேம்புராஜ். பொதுச்செயலாளர்கள் பாலகிருஷ்ணன், கோமதிநாயகம்.ஒ.பி.சி.அணி மாவட்ட தலைவர் மாரியப்பன் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.

  பேரணிநகரமுக்கிய வீதிகளின்வழியாக சென்று பஸ்நிலையம் அருகில் இருக்கும். சுதந்திரபோராட்ட தியாகி வாஞ்சிநாதன் சிலை முன்பு வந்தடைந்தது.

  பின்பு வாஞ்சிசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்புசாரா பிரிவு துணை தலைவர் பேச்சி முத்து, மாவட்ட கூட்டுறவுபிரிவு செயலாளர் வர்மா தங்கராஜ், மாவட்ட உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு துணைத்தலைவர் சென்பாகராஜன் நகர பொருளாளர் ராம்குமார், இளைஞரணி துணைத்தலைவர் அருண்சங்கர், பொதுச் செயலாளர் ஸ்ரீராம்கார்த்திக், செயலாளர்கள் முத்துக்குமார், மகாராஜன், பொருளாளர் கார்த்திக் மற்றும் அணி பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo