உள்ளூர் செய்திகள்

 வயல்களில் வேளாண் துறையினர் ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

சுந்தரபாண்டியபுரம் பகுதியில் பயிர்களை ஆய்வு செய்த வேளாண்மை இணை இயக்குனர்

Published On 2022-07-13 09:10 GMT   |   Update On 2022-07-13 09:10 GMT
  • வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை விவசாயிகளுக்கு வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் எடுத்துக் கூறினார்.
  • ஏற்பாடுகளை சுந்தரபாண்டியபுரம் உதவி வேளாண் அலுவலர் பரமசிவன் செய்திருந்தார்.

தென்காசி:

தென்காசி வட்டாரம் சுந்தரபாண்டியபுரம் கிராமத்தில் தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் விவசாயிகளை சந்தித்து சூரியகாந்தி மற்றும் சோளம் பயிரில் நோய் மற்றும் பூச்சிகளை கண்டறிந்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். சுந்தரபாண்டியபுரம் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் பரப்புகளை ஆய்வு செய்து பயிர் ஒத்திசைவு செய்ய அறிவுறுத்தினார். வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.

பின்னர் தென்னையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம் திட்டத்தின் கீழ் தக்கை பூண்டு செயல் விளக்க திடல்களை ஆய்வு செய்தார். தென்காசி வேளாண்மை உதவி இயக்குநர் கனகம்மாள் சிற்றாறு உபவடி நிலப்பகுதி திட்டத்தின் கீழ் சோளம் செயல் விளக்க திடல்களை பார்வையிட்டார். மேலும் நிகழ்வில் துணை வேளாண்மை அலுவலர் திவான் பக்கீர் முகைதீன் கலந்து கொண்டார். ஏற்பாடுகளை சுந்தரபாண்டியபுரம் உதவி வேளாண் அலுவலர் பரமசிவன் செய்தார். இந்நிகழ்ச்சியில் முன்னோடி விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags:    

Similar News