உள்ளூர் செய்திகள்

உடன்குடி புதிய குளம் அமைக்க இடங்களை தேர்வு செய்த போது எடுத்த படம்.




அமைச்சர்அனிதா ராதாகிருஷ்ணன் உத்தரவுபடி உடன்குடியில் புதிய குளம் அமைக்க இடம் தேர்வு

Published On 2022-06-29 09:10 GMT   |   Update On 2022-06-29 09:10 GMT
  • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செட்டியாபத்துஊராட்சியில் புதிய குளம் அமைக்க இடங்களைதேர்வு செய்ய உத்தரவிட்டார்.
  • புதிய குளம் அமைக்க வேண்டும் என்பது 25 கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும்.

உடன்குடி:

உடன்குடி பகுதியில் நிலத்தடி நீரை பாதுகாக்கவும், விவசாயத்தை காக்கவும் உடன்குடி மற்றும் சுற்றுபுற பகுதிகளில் உள்ள சுமார் 25 கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று, இத்தொகுதியின்சட்டமன்ற உறுப்பினரும், தமிழக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் செட்டியாபத்துஊராட்சியில் புதிய குளம் அமைப்பதற்கான இடங்களைதேர்வு செய்யும்படி உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி செட்டியாபத்து ஊராட்சியில் புதிய குளம் அமைப்பதற்கான இடம் மற்றும் தண்ணீர் கொண்டு வரும் வழித்தடங்களை உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள், தி.மு.க.வை சேர்ந்த மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, உடன்குடி நகர அவைத்தலைவர் சேக் முகமது, மாணவரனி அருண்குமார், எள்ளுவிளை கிளை செயலாளர் மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டு இடங்களை தேர்வு செய்த தகவலை அமைச்சருக்கு அனுப்பினர்.

Tags:    

Similar News