உள்ளூர் செய்திகள்

திண்டிவனம் அருகே மணல் ஏற்றி வந்த வாகனம் பறிமுதல்

Published On 2022-09-28 07:11 GMT   |   Update On 2022-09-28 07:11 GMT
  • திண்டிவனம் அருகே மணல் ஏற்றி வந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
  • தப்பி ஓடிய நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்:

திண்டிவனம் மற்றும் அதனைச சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் அங்குள்ள ஏரி மற்றும் குளங்களில் மண் மற்றம் மணல் திருடப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் இன்று திண்டிவனம் அடுத்த மேல் பக்கத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அந்த பகுதியில் உள்ள ஓடையில் வாகனம் ஒன்றில் மணல் திருடப்படுவது தெரிய வந்தது. .பின்பு போலீசார் அவர்களை நெருங்கும்போது, அவர்கள் அந்தப் பகுதியில் இருந்து வாகனத்தை விட்டு விட்டு தப்பி ஓடினர்.

பின்பு அந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் ரோசனை காவல் நிலையம் எடுத்து வந்து வாகனத்தின் பதிவு எண் கொண்டு விசாரணை செய்தபோது, அந்த வாகனம் திண்டிவனம் அய்யந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருடைய வாகனம் எனத் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News