உள்ளூர் செய்திகள்

சிவகிரியில் ஒரு கடையில் சுகாதார அலுவலர்கள் சோதனை நடத்திய காட்சி.

சிவகிரியில் பள்ளி அருகே புகையிலை விற்ற 6 கடைகாரர்களுக்கு அபராதம்- சுகாதார அலுவலர்கள் நடவடிக்கை

Published On 2022-07-01 09:02 GMT   |   Update On 2022-07-01 09:02 GMT
  • சிவகிரி நகர பஞ்சாயத்து சுகாதார அலுவலர்கள் பள்ளிக்கூடங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை செய்தனர்.
  • 6 கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது.

சிவகிரி:

வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய் உத்தரவின் பேரில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி தலைமையில், சுகாதார ஆய்வாளர் ரவிக்குமார், விஷ்ணு, ராஜாராம், சிவகிரி நகர பஞ்சாயத்து சுகாதார மேற்பார்வையாளர் குமார், தினேஷ் குமார் மற்றும் அலுவலர்கள் சிவகிரி பகுதியில் குமாரபுரம், சிவராமலிங்கபுரம் மேலத்தெரு, பஜார், அம்பேத்கர் பகுதி, சிவகிரி முக்கிய ரத வீதிகள் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளிலும் மற்றும் பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள கடைகளிலும் புகையிலை மற்றும் போதைப் பொருட்கள், பீடி, சிகரெட் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை செய்தனர்.

இவற்றில் பள்ளிக்கூடம் அருகே உள்ள கடைகளில் புகையிலை விற்பனை செய்து கொண்டிருந்ததாக 6 கடை உரிமையாளர்களை பிடித்து கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News