உள்ளூர் செய்திகள்

சரக்கு வேனில் கடத்திய 400 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

Published On 2022-11-14 07:21 GMT   |   Update On 2022-11-14 07:21 GMT
  • வேனை போலீசார் நிறுத்த முயன்ற போது டிரைவர் வேனை நிறுத்தா மல் வேகமாக சென்று மற்றொரு வாகனத்தில் மோதினார்
  • தப்பி ஓடியவர்கள் போலீசிடம் சிக்கினால் தான் இந்தக் கடத்தல் பின்னணியில் யார்? யார்? உள்ளார்கள் என தெரியவரும்.

ஈரோடு:

சித்தோடு சப் -இன்ஸ்பெ க்டர் குக்கேஸ்வரன் தலை மையிலான போலீசார் நசியனூர் அடுத்த கந்தம்பாளையம் பிரிவு கோவை- சேலம் பைபாஸ் ரோட்டில் வாகன சோத னையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சரக்கு வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த வேனை போலீசார் நிறுத்த முயன்ற போது டிரைவர் வேனை நிறுத்தா மல் வேகமாக சென்று மற்றொரு வாகனத்தில் மோதினார். இதையடுத்து அந்த சரக்கு வேனில் இருந்த 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.

இதையடுத்து சித்தோடு போலீசார் சந்தேகம் அடைந்து வேனின் பின் பகுதியை சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான் மசாலா, புகையிலைப் பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்தன.

மொத்தம் 400 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த புகையிலை பொரு ட்களை எங்கிருந்து எங்கு கடத்தி சென்றார்கள் என தெரியவில்லை. புகையிலை பொருட்களையும், சரக்கு வேனையும் போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடியவர்கள் போலீசிடம் சிக்கினால் தான் இந்தக் கடத்தல் பின்னணியில் யார்? யார்? உள்ளார்கள் என தெரியவரும்.

இந்த சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News