உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட கஞ்சா கடத்திய கும்பல்.

ஆட்டோவில் கஞ்சா விற்பனை ஒரே குடும்பத்தினர் உள்பட 4 பேர் கைது

Published On 2022-07-19 04:19 GMT   |   Update On 2022-07-19 04:24 GMT
  • தேனி மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட எஸ்.பி பிரவீன் உமேஷ்ேடாங்கரே உத்தரவின்பேரில் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
  • ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்த ஒரே குடும்பத்தினர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

வருசநாடு:

தேனி மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட எஸ்.பி பிரவீன் உமேஷ்ேடாங்கரே உத்தரவின்பேரில் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி பலர் கைது செய்யப்பட்டு அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

கடமலைக்குண்டு பகுதியில் நூதனமுறையில் ஆட்ேடாவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் பாலூத்து பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் பாலூத்து கிராமத்தை சேர்ந்த ஜெயபால்(55), அவரது மகள் சத்யா(39), மகன் ஜெயசூர்யா(38) மற்றும் ஆட்டோ டிரைவர் சுந்தரபாண்டி(23) ஆகிய 4 பேரும் சேர்ந்து ரூ.1லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான 8 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் மேலும் ஆட்டோ மற்றும் அவர்களிடமிருந்த ரூ.40ஆயிரம் பணத்தையும் கைப்பற்றினர். இந்த கஞ்சாவை எங்கிருந்து வாங்கி வந்தார்கள். யாருக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றார்கள் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News