உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புகையிலைப் பொருட்கள் விற்ற 3 கடைகளுக்கு சீல்: 22 பேர் மீது வழக்கு

Published On 2023-08-14 07:16 GMT   |   Update On 2023-08-14 07:16 GMT
  • புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
  • 22 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவின் பேரில் மாவட்டம் முழு வதும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நடத்தப்பட்ட சோதனையில் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்த 22 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். மேலும், மணலூர் பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மணிகண்டன் (வயது 46), சதீஷ்(30) மற்றும் வரஞ்சரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிலம்பரசன் (38) ஆகியோரின் 3 கடைகளை மூடி சீல் வைத்தனர்.

Tags:    

Similar News