உள்ளூர் செய்திகள்
ஸ்பிக் நிறுவனத்தில் அவசர கால ஒத்திகை நடைபெற்ற காட்சி.

தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் அவசர கால ஒத்திகை

Published On 2022-06-04 09:10 GMT   |   Update On 2022-06-04 09:10 GMT
தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் அவசர கால ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் அவசர கால ஒத்திகை  தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை இணை இயக்குனர் நிறைமதி முன்னிலையில் நடைபெற்றது.

இதில் யூரியா பிரிவில் அம்மோனியா சேமிப்பு கொள்கலனிலிருந்து வெளிவரும் குழாயில் அம்மோனியா கசிந்தால் அதனை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து ஒத்திகை செய்து பார்க்கப்பட்டது.

இதை ஸ்பிக் நிறுவன தொழிற்சாலை பொது மேலாளர் செந்தில் நாயகம் அவசர கால கட்டுப்பாடு அறையிலிருந்து அம்மோனியா கசிவை கட்டுப்படுத்த உதவி பொது மேலாளர் சுப்பிரமணியன் ஆலோசனை வழங்கினார்.

தொழிற்சாலை தலைவர் அறிவுரையின்படி தொழிற்சாலை ஊழியர்கள் பாதுகாப்பு சாதனங்கள் அணிந்து கொண்டு அம்மோனியா சகிவினை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் சுற்றுச்சூழலில் மாசு நிலை சரி பார்க்கப்பட்டு ஒத்திகை நிகழ்ச்சி முடித்துக்கொள்ளப்பட்டது.

இதில் ஸ்பிக் மற்றும் கணநீர் ஆலை நிறுவனத்தின்  தீயணைப்பு துணை வீரர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறையின் உதவி பொதுமேலாளர் ரவிச்சந்திரன் ஒத்திகை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

அவசர கால ஒத்திகை முடிந்தபின் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில், தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார துறையின் இணை இயக்குனரான நிறைமதி ஒத்திகை  நடத்திய அனைவரையும் பாராட்டினார். மேலும் ஒத்திகையை சிறப்பாக நடத்த அவரது மேலான கருத்துக்களை தெரிவித்தார்.
Tags:    

Similar News