search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tuticorin"

    • கடந்த ஆண்டு ரூ.20-க்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
    • போராட்டம் வருகிற 22-ந் தேதி வரை நடைபெறும் என நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    கோவில்பட்டி:

    இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டியில் 90 சதவீதம் தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களான விருதுநகர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டகளில் அதிகளவு தீப்பெட்டி உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த தொழிலை நம்பி 4 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.

    ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விதமாக தீப்பெட்டி தொழிலுக்கு பிரச்சினை வந்த போதிலும் கடந்த சில ஆண்டுகளாக ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் லைட்டர்கள் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ஒரு சிகரெட் லைட்டர் விற்பனை 20 தீப்பெட்டி விற்பனையை தடை செய்து வருவதாக கூறப்படுகிறது.

    எனவே பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து கடந்த ஆண்டு ரூ.20-க்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

    இருந்த போதிலும் சீனாவில் இருந்து நேபாளம் வழியாக இந்தியாவிற்கு பிளாஸ்டிக் லைட்டர்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ரூ.8 முதல் ரூ.10 வரை பிளாஸ்டிக் லைட்டர்கள் விற்பனை செய்யப்படும் நிலை இருப்பதால் தீப்பெட்டி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலகோடி ரூபாய் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன.

    இந்நிலையில் இதனை கண்டித்து இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து இந்த போராட்டம் வருகிற 22-ந் தேதி வரை நடைபெறும் என நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    இதனால் பகுதி மற்றும் முழு எந்திரம் என சுமார் 700 தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளது மட்டுமின்றி, 4 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை இழக்கும் நிலை ஏற்படும். மேலும் நாள் ஒன்றுக்கு ரூ.6 கோடி தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்படும் நிலை உள்ளது.

    இது குறித்து நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பரமசிவம் கூறுகையில், இந்த தொழில் நலிந்து போவதற்கு ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் லைட்டர்கள் ஒரு காரணமாக இருக்கும். மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தாலும் அதிகாரிகள் லைட்டர்கள ஒழிக்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தீப்பெட்டி உற்பத்தி, விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுக்க முடியாத நிலை இருப்பதால் 10 நாட்கள் தீப்பெட்டி ஆலைகளில் உற்பத்தி நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    • மறைந்த வி ஏ ஓ லூர்து மகன் மார்ஷல் ஏசுவடியான் தனது தந்தையின் கனவை நிறைவேற்றும் விதமாக சிவில் நீதிமன்ற நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
    • உன்னை நீதிபதியாக பார்க்க வேண்டும் என என் தந்தை சொல்லிக்கொண்டே இருப்பார். அவரது ஆசையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சியாக உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்தாண்டு மணல் கொள்ளையர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸின் மகன் மார்ஷல் ஏசுவடியான், சிவில் நீதிமன்ற நீதிபதி தேர்வில் வென்று சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார்.

    "உன்னை நீதிபதியாக பார்க்க வேண்டும் என என் தந்தை சொல்லிக்கொண்டே இருப்பார். அவரது ஆசையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வெற்றிக்கு எனது குடும்பம் மிகவும் உறுதுணையாக இருந்தது" என ஏசுவடியான் கூறியுள்ளார்.

    தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ். இவருக்கு வயது 55. இவர் மணல் கொள்ளையை தடுப்பதில் தீவிரமாக செயல்பட்டு வந்ததால் கோபமடைந்த ஒரு கும்பல் அவரது அலுவலகத்திலேயே கடந்த ஏப்ரல் 25-ம் தேதி வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது.

    லூர்து பிரான்சிசை வெட்டி கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் கலியாவூரை சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்ற ராமசுப்பு (41) மற்றும் மாரிமுத்து (31) ஆகிய இருவருக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. அதோடு இருவருக்கும் தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    இந்த நிலையில், மறைந்த வி.ஏ.ஓ லூர்து மகன் மார்ஷல் ஏசுவடியான் தனது தந்தையின் கனவை நிறைவேற்றும் விதமாக சிவில் நீதிமன்ற நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தனி தீவுகளாக காட்சி அளித்தன.
    • தமிழக அரசு சார்பில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டது.

    கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் அணைகள் நிரம்பியதால் சுமார் 1 லட்சம் கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தனி தீவுகளாக காட்சி அளித்தன. லட்சக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதைத்தொடர்ந்து வெள்ளத்தில் தவித்தவர்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.


    தமிழக அரசு சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.6 ஆயிரம், மற்றவர்களுக்கு ரூ.1000 என வழங்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.


    இந்நிலையில், நடிகர் பிரசாந்த், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் மழையால் பாதிக்கப்பட்ட 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வலம் வருகிறது. இதற்கு முன்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார்.

    • வெள்ளம் காரணமாக பல பகுதிகள் துண்டிக்கப்பட்டன.
    • செல்போன் டவர்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.

    தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய இரு தினங்ளில் பெய்த அதிக கனமழை காரணமாக வெள்ள பெருக்கு ஏற்பட்டது.

    இதன் காரணமாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஏரல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக துண்டிக்கப்பட்டன.

    சாலைகள் மழை, வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது. தற்போது வெள்ளம் வடிந்து வரும் நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழை பாதிப்பு காரணமாக செல்போன் டவர்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.

     


    இதன் காரணமாக தகவல் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர், ஏரல், காயல்பட்டினம் பகுதிகளை சுற்றியுள்ள பகுதிகளில் தொலைபேசி சேவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், பெருமழை மற்றும் வெள்ளத்திற்கு பிறகு தூத்துக்குடியில் பி.எஸ்.என்.எல். சேவை துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 60 சதவீத பி.எஸ்.என்.எல். சேவை செயல்பட துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    • தூத்துக்குடி, குறுக்குச்சாலை கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அருகில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளுக்கிடையேயான கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றது.
    • தமிழ் பேச்சு போட்டி, ஆங்கில பேச்சு போட்டி, தமிழ் கட்டுரை போட்டி, ஆங்கில கட்டுரை போட்டி, போஸ்டர் வரைதல், ரங்கோலி கோலம், குழு பாடல்கள் பாடுதல், நாட்டுப்புற பாடல்களுக்கு நடனம் ஆடுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி, குறுக்குச்சாலை கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அருகில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளுக்கிடையேயான கலைதிறன் போட்டிகள் நடைபெற்றது. தமிழ் பேச்சு போட்டி, ஆங்கில பேச்சு போட்டி, தமிழ் கட்டுரை போட்டி, ஆங்கில கட்டுரை போட்டி, போஸ்டர் வரைதல், ரங்கோலி கோலம், குழு பாடல்கள் பாடுதல், நாட்டுப்புற பாடல்களுக்கு நடனம் ஆடுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் கல்லூரியின் அருகில் உள்ள பள்ளிகளை சேர்ந்த சுமார் 150 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ஓட்டு மொத்த சுழற்கோப்பையை புதியம்புத்தூர் மகாத்மா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும், 2-ம் பரிசை குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியும் பெற்றது. கல்லூரி செயளாளர் ஜீவன் ஜேக்கப் தலைமை தாங்கி பரிசுகளை வழங்கினார். முன்னதாக கல்லூயின் முதல்வர் இளங்குமரன் வரவேற்றார்.

    • குரூஸ் பர்னாந்து பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள அவரது சிலைக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    குரூஸ் பர்னாந்து பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள அவரது சிலைக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினரும், கவுன்சிலருமான சந்திர போஸ், மண்டல தலைவர்கள் சேகர், ஐசன் சில்வா, ராஜன், அமைப்புசாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், விவசாய பிரிவு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன், ஊடகப்பிரிவு மாநில செயலாளர் முத்து மணி ,மாணவர் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் பிரவீன் துரை, மாவட்டத் துணை தலைவர்கள் பிரபாகரன், டேவிட் வசந்தகுமார், ரஞ்சிதம் ஜெபராஜ், சின்னகாளை, மைக்கில் பிரபாகர், ஜோபாய் பச்சேக், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வெங்கடசுப்பிரமணியன் ,மாவட்ட பொதுச்செயலாளர் மிக்கேல், மாவட்ட செயலாளர்கள் கோபால், கதிர்வேல், காமாட்சி தனபால், ஜெயராஜ், மாரிமுத்து, ஜெபத்துரை, வார்டு தலைவர்கள் முத்துராஜ், சண்முகசுந்தரம், தனுஷ், சுப்பிரமணியன், ஜெய கிங்ஸ்டன், ஜூட்சன், கருப்பசாமி , கிருஷ்ணன் , முகமது மீராசா, மெர்லின் பிச்சையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • அப்போது, மொய்தீன் என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், முனியசாமி, தனிப்பிரிவு தலைமை காவலர் முருகேசன் ஆகியோர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, தூத்துக்குடி கோமாஸ்புரம், ராஜீவ்காந்தி ஹவுசிங் போர்டு குவாட்டர்ஸ் பகுதியில், அதே பகுதியை சேர்ந்த மொய்தீன் (வயது 40) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மொய்தீனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்த 33 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மொய்தீன் புகையிலை பொருட்களை எங்கிருந்து கொண்டு வந்தார்? எங்கு கொண்டு செல்கிறார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பெரியசாமியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தி.மு.க. முன்னாள் மாவட்ட செய லாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான  பெரியசாமியின் 5-ம்  ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போல்பேட்டையில் அமைந்துள்ள மணி மண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு பெரியசாமியின் மனைவி எபனேசர், வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும் மீனவளம் மற்றும் கால்நடைதுறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் மார்க்கன்டேயன், சண்முகையா, பொதுக்குழு உறுப்பினரும், மேயருமான ஜெகன் பெரியசாமி, ராஜா பெரியசாமி, அசோக்பெரியசாமி, அவரது மருமகன்கள் ஜீவன்ஜேக்கப், சுதன்கீலர், மகள்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

     பின்னர் அசைவ உணவு பொதுமக்களுக்கு சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வழங்கினார்கள்.
    மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், செந்தூர்மணி, ஆறுமுகம், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், கனகராஜ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர் பிரதீப், 

    மாவட்ட மாணவரணி துணைச் செயலாளரும் மாநகராட்சி மண்டல தலைவருமான வக்கீல் பால குருசாமி,  பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் சூர்யா, ரவி, முன்னாள் மாவட்ட பிரதிநிதி அஜய்கோஷ், தொ.மு.ச. நிர்வாகிகள் முருகன், மரியதாஸ், கருப்பசாமி, சற்குணம், மின்வாரிய நிர்வாகிகள் பேச்சிமுத்து, லிங்கராஜ், அண்ணாநகர் பகுதி துணைச்செயலாளர் பாலு, வட்டச்செயலாளர்கள்  நாராயணன், ராஜா, டென்சிங், சேகர், முனியசாமி, கீதாசெல்வமாரியப்பன், ரவீந்திரன், அரசு வக்கீல் மாலாதேவி, மற்றும் சுப்பையா, சுடலைமணி, பிரபாகர், கருணா, மணி, அல்பர்ட், மகேஸ்வரன்சிங், உள்பட பலர் மரியாதை செலுத்தினார்கள்.

    39-வது வார்டு தி.மு.க. சார்பில் வட்டச்செயலாளர் கீதாசெல்வமாரியப்பன் தலைமையில் அலங்கரிக்கப்பட்ட பெரியசாமி படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி பொங்கலிட்டு நலத்திட்ட உதவிகளை பகுதி செயலாளரும் மாநகராட்சி சுகாதாரகுழு தலைவருமான சுரேஷ்குமார், வட்டச்செயலாளர் கீதாசெல்வமாரியப்பன், மாவட்ட பிரதிநிதி சக்திவேல் ஆகியோர் வழங்கினார்கள். அவைத்தலைவர் கணேச பாண்டியன், வட்டப்பிரதிநிதிகள் கார்த்திக், பொன்ராஜ், செல்வக்குமார், இளங்கோ அழகன், இளைஞர் அணி விக்னேஷ், மைதீன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தெற்கு மாவட்ட சார்பில் தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட துணைச் செயலாளர் செந்தூர்மணி தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, துணை அமைப்பாளர் அம்பாசங்கர்,  உள்பட பலர் மரியாதை செய்தனர்.

    காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் துணைத்தலைவர் பிரபாகரன், கவுன்சிலர்கள் சந்திரபோஸ், எடின்டா, மற்றும் பலர் மரியாதை செலுத்தினார்கள்.
    ம.தி.மு.க. சார்பில் வடக்கு மாவட்ட செயலாளரும் கோவில்பட்டி நகர்மன்ற துணைத்தலைவருமான ரமேஷ், மாவட்ட இளைஞர்அணி செயலாளர் விநாயகரமேஷ், மாநில மீனவரணி செயலாளர் நக்கீரன், மாநகர செயலாளர் முருகபூபதி உள்பட பலர் மரியாதை செய்தனர்.
    புதியம்புத்தூர் அருகே புதுப்பிக்கப்பட்ட கூட்டுறவு சங்க கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர்-தட்டப்பறை ரோட்டில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு நாணய சங்க கட்டிடம் புதுப்பிக்கும் பணி நடந்து வந்தது. இதனால் இந்த வளாகத்தின் பின் பகுதியில் உள்ள குடோனில் தொடக்க கூட்டுறவு வங்கி செயல்பட்டு வந்தது. தற்போது சங்க கட்டிட பணி முடிந்து 6 மாதம் ஆகியும் வங்கி கட்டிடம் திறக்கப்படவில்லை. 

    குடோனில் வங்கி செயல்படுவதால் விவசாயிகளுக்கு விற்பனை செய்யக்கூடிய பொட்டாஷ், யூரியா போன்ற உரங்கள் வைக்க இடமில்லாமல் உரங்களை வாங்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இப்பகுதி விவசாயிகள் வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு உரங்களை வாங்க வேண்டியது உள்ளது. 

    விவசாயிகள் இந்த குடோனில் விவசாய பொருட்களை வைக்க முடிவதில்லை. எனவே புதுப்பிக்கப்பட்ட புதிய கட்டிடத்தில் கூட்டுறவு சங்கத்தை செயல்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    தூத்துக்குடி அருகே நடுக்கடலில் மூழ்கிய படகை சீரமைக்க மீனவருக்கு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி திரேஸ்புரம், குழந்தை தெரசம்மாள் தெருவைச் சேர்ந்த ரஹீம் என்பவர் தனக்கு சொந்தமான நாட்டுப்படகில் கடலுக்குள் சென்று சங்கு குளிக்கும் தொழிலை செய்து வருகிறார்.

    வழக்கம் போல் கடந்த 11-ந் தேதி அவர் தனது நாட்டுப்படகில் திரேஸ்புரத்திலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். அவரோடு 11 மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர். அன்று வங்க கடலில் உருவான அசானி புயல் காரணமாக வங்க கடல் பகுதியில் பலத்த காற்று வீச தொடங்கியது. 

    தூத்துக்குடி கடல் பகுதியிலிருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் படகு சென்று கொண்டிருந்த போது சுமார் 70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இந்த காற்றின் காரணமாக கடலில் அலையின் வேகம் அதிகரித்தது. 

    இந்த நிலையில் கரை திரும்ப இருந்த நேரத்தில் கடலில் ஏற்பட்ட சீற்றத்தினால் ரஹீம் மற்றும் 11 மீனவர்கள் சென்ற படகு கடலில் மூழ்க தொடங்கியது. செய்வதறியாது திகைத்த நிலையில் படகு சிறிது,சிறிதாக கடலுக்குள் மூழ்கியது.படகில் சென்ற மீனவர்கள்  கடலுக்குள் தத்தளித்த நிலையில் சற்று தொலைவில் வேறொரு நாட்டுப் படகில் சென்ற மீனவர்கள் தத்தளித்த 11 மீனவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

     அதன் பின்னர் ஒரு சில நாட்களுக்கு பின் கடலில் மூழ்கிய நாட்டுபடகு விசைப் படகு மற்றும் எந்திரம் மூலமாக மீட்டெடுக்கப்பட்டு திரேஸ்புரம் கடற் பகுதிக்கு கொண்டு வரப்பட்டன.  

    இந்த படகை மட்டுமே நம்பி தொழில் செய்து வந்த ரஹீம் படகில் ஏற்பட்ட சேதத்தின் காரணமாக மன உளைச்சல் அடைந்தார்.அவருடைய வாழ்வாதாரமாக இருந்த படகை சரி செய்ய பணமின்றி தவித்தார்.

    அவருக்கு எந்த ஒரு அமைப்பு உட்பட யாரும் எந்த உதவியும் அளிக்கவில்லை என்ற நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் ரூ.1  லட்சம் நிதி உதவி வழங்கி படகை சரி செய்து கொடுத்துள்ளது.

     நிறுவனமும் எந்த ஒரு அமைப்பும் தனக்கு நிதியுதவி வழங்காத நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனம் அளித்த இந்த நிதி உதவிக்கு சங்குகுளி மீனவர் ரஹீம் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் நன்றியை தெரிவித்துள்ளனர். 

    தூத்துக்குடி மக்களின் துயர்துடைப்பதில் ஸ்டெர்லைட் நிறுவனம் என்றும் துணைநிற்கும் என அந்நிறுவன சமூக செயல்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.
    விளாத்திகுளத்தில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் செயல்பட்டு வருகிறார் என அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் காய்கறி மார்க்கெட் அருகில் வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் சட்டமன்ற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய தி.மு.க. நிர்வாகிகளுக்கு  மார்க்கண்டேயன்  எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் அமைச்சர் கீதாஜீவன் 1 பவுன் தங்க மோதிரம் வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    அகில இந்திய அளவில் நம்பர் ஒன் முதல்வராக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார். அந்த அளவிற்கு தமிழகத்தில் நல்லாட்சி புரிந்து வருகிறார்.

    தேர்தலின் போது கொடுத்த 570 வாக்குறுதிகளில் 270 வாக்குறுதிகளை ஆட்சி பொறுப்பு ஏற்றதும் நிறைவேற்றியுள்ளார். தொழில் வளர்ச்சி ஏற்பட வேண்டும், மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும், தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் செயல்பட்டு வருகிறார்.


    மாற்றுத்திறனாளிகளுக்கு தனி தேர்வு நடத்தப்பட்டுள்ளது. எல்லா இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.டெல்டா மாவட்டங்களில் மட்டும் ரூ. 3ஆயிரத்து 300 கோடி மதிப்பில் தூர்வரும் பணிகள் நடைபெற்றுள்ளது. இவ்வாறு  அவர் பேசினார்.

    இதில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, மும்மூர்த்தி செல்வராஜ், பேரூராட்சி தலைவர் அயன் ராஜ், துணைத் தலைவர் வேலுச்சாமி, தலைமை கழகப் பேச்சாளர்கள் சரத்பாலா, ஆரணிமாலா, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

     நிகழ்ச்சி ஏற்பாடு விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக செய்யப்பட்டிருந்தது.
    ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட விழா நடைபெற்றது. விழாவில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    தென்திருப்பேரை:

    ஆழ்வார் திருநகரி வட்டாரத்தில் 2021- 22 -ம் ஆண்டில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்து வட்டார வேளாண் உதவி இயக்குனர் அல்லிராணி கூறியதாவது:-

    2021-22-ம் ஆண்டில் ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம், கருங்கடல், வெள்ளமடம், கச்சனாவிளை ஆகிய கிராமங்களில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுதல் மற்றும் மானிய விலையில் இடு பொருட்கள் வழங்குதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  

    இத்திட்டத்தின் தொடக்க விழாவில் விவசாயிகளுக்கு மானிய விலையில் தென்னங்கன்றுகள், கைதெளிப்பான்கள், வரப்பு பயிராக பயிரிட ஏதுவாக உளுந்து விதைகள் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மண்புழு உரங்கள், மரக்கன்றுகள், வீட்டுத்தோட்ட விதைகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் வெள்ளமடம் கிராமத்தில் நடைபெற்ற விழாவில் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் இடு பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜேஸ்மின் கலந்து கொண்டார். ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீதர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு இடுபொருட்களை விளங்கினார். கருங்கடல் மற்றும் கச்சனாவிளை கிராமங்களிலும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு இடுபொருட்களை விளங்கினார்கள்.

    நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகத் துறை, விதைசான்று துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆழ்வை வட்டார வேளாண் அலுவலர், துணை வேளாண் அலுவலர், உதவி வேளாண் அலுவலர் மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.
    ×