உள்ளூர் செய்திகள்
விபத்து பலி

சாத்தான்குளம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பா.ஜனதா நிர்வாகி பலி

Published On 2022-05-26 06:39 GMT   |   Update On 2022-05-26 06:39 GMT
சாத்தான்குளம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பா.ஜனதா நிர்வாகி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள பூவுடையார்புரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துலிங்கம் (வயது 43). இவர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் வக்கீல் பிரிவு செயலாளராக பணியாற்றி வந்தார். நேற்று தனது மோட்டார் சைக்கிளில் வழக்கம்போல் சாத்தான்குளம் கோர்ட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் முத்துலிங்கம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முத்துலிங்கம் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News