உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கொமரலிங்கம் சாலைப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு

Published On 2022-05-25 07:57 GMT   |   Update On 2022-05-25 07:57 GMT
நிதி ஒதுக்கீடு மற்றும் விதிமுறைகளின்படி, ரோடு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

மடத்துக்குளம்:

தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை திட்ட பணிகளை, உள்தணிக்கை, கோப்பு குறித்த ஆய்வு மற்றும் கள ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தாராபுரம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் சார்பில் பல்வேறு ரோடுகளில் கள ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

மடத்துக்குளம் உட்கோட்டம், மாவட்ட முக்கிய சாலையான உடுமலை-கொமரலிங்கம் ரோட்டில் 2 கி.மீ., தொலைவுக்கு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் கண்காணிப்பு பொறியாளர் சரவணன் தலைமையிலான குழுவினர், நிதி ஒதுக்கீடு மற்றும் விதிமுறைகளின்படி, ரோடு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர். ஈரோடு கோட்ட பொறியாளர் வத்சலா, தாராபுரம் கோட்ட பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி உடன் இருந்தனர்.


Tags:    

Similar News