உள்ளூர் செய்திகள்
முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது

கம்பத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 750 பேர் தேர்வு

Update: 2022-05-23 05:32 GMT
கம்பத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 750 பேர் தேர்வு செய்யப்பட்டனர்
உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் கம்பத்தில் பால முத்தழகு குழுமத்தின் பெஸ்ட் மணி கோல்டு சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ.தலைமை தாங்கினார். கம்பம் பள்ளத்தாக்கு விவசாய சங்கத் தலைவர் நாராயணன், பி.எம்.ஜி. படகு இல்ல நிர்வாக துணை இயக்குனர் சுப்பையா, தேனி மாவட்ட ம.தி.மு.க செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பால முத்தழகு குழுமத்தின் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா அனைவரையும் வரவேற்று பேசினார். முகாமை கம்பம் முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தெற்கு மாவட்ட தலைவர் கூடல் செல்வேந்திரன், தேனி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் களின் கூட்டமைப்புத் தலைவர் பால்ராஜ், ராயப்பன்பட்டி ஜெனீஸ் குழுமத் தலைவர் அதிசயம், மாவட்ட அரசு வக்கீல் குணசேகரன்,ஆர்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளி துணை தலைவர் அசோக்குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.

 இந்த முகாமில் பொது மேலாளர், துணை பொது மேலாளர், மேலாளர், துணைமேலாளர், ஆடிட்டர், கேசியர், மார்க்கெட்டிங் மேலாளர், நகை மதிப்பீட்டாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு தேர்வு நடைபெற்றது.

இதில் வெளிமாவட்ட கிளைகளுக்கு 450 பேர் தேர்வு செய்யப்பட்டுஉடனடியாகபணி ஆணையை பால முத்தழகு குழுமத்தின்நிர்வாக துணை இயக்குனர் அன்பு சுடர் வழங்கினார். மேலும் பல்வேறு பணிகளுக்கு 300 பேர்தேர்வு செய்யப்பட்டனர்.பொதுமேலாளர் சுப்பிரமணி நன்றி கூறினார். பால முத்தழகு குழுமத்தின் துணை நிர்வாக இயக்குனர் அன்பு சுடர் கூறுகையில்,

 கம்பத்தில் பால முத்தழகு குழுமம் சார்பில் முதன் முதலாக தங்கநகை தொடர்பான நிறுவனங்கள் தொடங்கப்பட்டு தற்போது தென்னிந்தியா முழுவதும் 200 கிளைகளைக் கொண்டுள்ளது.  இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்துக்கு தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கிளைகள் உள்ளது.

 இதே போல கேரள மாநிலம் ஆலப்புழா குமரகத்தில் படகு இல்லம், டூரிஸ்ட் வர்த்தகத்தில் முதன்முறையாக கால்பதித்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.இதை தவிர பி.எம்.ஜி. தங்க நகைக்கடை தொடங்கப்பட்டு இதில் அனைத்து தரப்பு பொதுமக்களும் பயன்படுகின்ற வகையில் செய்கூலி சேதாரம் இன்றி தங்க நகை விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பி.எம்.ஜி.நிதி நிறுவனங்கள் மூலம் நிதி சேவைகளை சிறப்பாக செய்து வருகிறோம் என்றார்.

Tags:    

Similar News