உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

கோவில்பட்டியில் மாணவர்களுக்கு 50 நாட்கள் நீட் தேர்வு பயிற்சி-26-ந்தேதி தொடக்கம்

Update: 2022-05-21 10:41 GMT
கோவில்பட்டியில் மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வருகிற 25-ந்தேதி தொடங்கி 50 நாட்கள் நடைபெறுகிறது.
கோவில்பட்டி:

கோவில்பட்டி எம்.எம்.கல்வி அறக்கட்டளை சார்பில் அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்வுக்கான 50 நாள் முழுநேர பயிற்சி வகுப்புகளை உயர் தகுதியும் அதிக அனுபவம் வாய்ந்த வல்லுனர்களை கொண்டு நடத்த இருக்கிறது.

இப்பயிற்சியில் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் தலா 50 மாணவர்கள் மட்டும் சேர்ந்து கொள்ளப்பட உள்ளனர். பயிற்சி வகுப்புகள் வருகிற 26-ந்தேதி முதல் தொடங்க உள்ளது. இதில் அனைத்து மொழி பாடங்களும் தனித்தனியே அச்சிடப்பட்ட பாடக்குறிப்புகள் மூலம் வழங்கப்பட உள்ளது. 

இப் பயிற்சியில் சேருவதற்கான தகுதி தேர்வு வருகிற 25-ந்தேதி கோவில்பட்டி சாத்தூர் நான்கு வழி சாலையில் உள்ள எம்.எம். வித்யாஸ்ரமம் சிபிஎஸ்இ பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் வைத்து காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. 

இதில் 150 மதிப்பெண்களுக்கான கொள்குறி வகை வினாக்கள் கேட்கப்பட உள்ளது. இத்தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் மற்றும் முன்பதிவு செய்ய சந்தேகங்களை கேட்டு அறிய விரும்பும் மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் 9655177777, 8940199911, 8940199900, மேலும் தமிழக அரசு வழங்கும் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும் என அக்கடமி இயக்குனரும் எம்.எம். வித்யாஸ்ரம் பள்ளியில் முதல்வருமான விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News