உள்ளூர் செய்திகள்
.

தனியார் பள்ளியில் 25 சதவீதம் இடஒதுக்கீடு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு

Published On 2022-05-19 09:44 GMT   |   Update On 2022-05-19 09:44 GMT
தனியார் பள்ளியில் 25 சதவீதம் இடஒதுக்கீடு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சேலம்:

தனியார்  பள்ளிகளில் அரசு ஒதுக்கீட்டில் ஏழை, எளிய பெற்றோர்களது குழந்தைகள் சேர  விண்ணப்பம் செய்வ தற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

 சேலம் மாவட்டத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, அனைத்து சிறுபான்மையற்ற தனியார், சுயநிதி பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு, 25 சதவீத இடஒதுக்கீடு சேர்க்கை வழங்கப்படுகிறது.

இதற்காக rte.tnschool.gov.in எனும் இணையதளத்தில் விண்ணப்பிக்க நேற்று வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது வருகிற 25-ந்தேதி வரை நீட்டித்து கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

அதனால் சம்பந்தப்பட்ட பள்ளிகள், வட்டார வள மையங்கள், வட்டார கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.  இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
Tags:    

Similar News