உள்ளூர் செய்திகள்
தீ

நகை, பணம் கிடைக்காததால் ஆத்திரம்- திருட வந்த வீட்டுக்கு தீ வைத்த கொள்ளையர்கள்

Update: 2022-05-19 04:19 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் நகை, பணம் கிடைக்காததால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் திருட வந்த வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருக்கோவிலூர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ. நகர் விநாயகர் கோவில் அருகில் வாசன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது.

இந்த வீட்டின் 2வது மாடி பூட்டியிருந்த நிலையில், மாலை 5.30 மணி அளவில் 2-வது தளத்தில் இருந்து புகை வந்தது. இதுபற்றி அக்கம் பக்கம் உள்ளவர்கள் வாசனுக்கு தெரிவித்தனர்.

அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் வீட்டின் மேல் பகுதிக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு துணி, கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அவர்கள் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

உடனே வாசன் பீரோ இருந்த அறைக்கு சென்றார் பார்த்தார். அப்போது பீரோ திறந்து இருந்தது. அதில் இருந்த துணிமணிகள், அறையில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தது.

அப்போது மர்மநபர்கள் வீட்டுக்குள் நைசாக ஏறி குதித்து உள்ளனர். அவர்கள் கொள்ளை அடிக்கும் நோக்கில் பீரோவை ஆராய்ந்தபோது நகை, பணம் எதுவும் கிடைக்காததால், ஆத்திரத்தில் தீவைத்து விட்டு சென்றிருப்பது தெரியவந்து உள்ளது.

இதுகுறித்து வாசன் திருக்கோவிலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டுக்கு தீ வைத்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News