உள்ளூர் செய்திகள்
கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை படத்தில் காணலாம்.

விதிகளை மீறி இயங்கும் குவாரிகளுக்கு சீல் வைக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு

Published On 2022-05-18 10:04 GMT   |   Update On 2022-05-18 10:04 GMT
நெல்லை மாவட்டத்தில் விதிகளை மீறி இயங்கும் குவாரிகளுக்கு சீல் வைக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
நெல்லை:

மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப  பாண்டியன் தலைமையில் ஏராளமானோர் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமிதிப்பான் குளம் கிராமத்தில் சட்டவிரோதமாக இயங்கிவரும் கல்குவாரியை உடனடியாக மூடி சீல் வைக்க வேண்டும். அதில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.50 லட்சமும், கல்குவாரி நிர்வாகம் சார்பில் ரூ.1 கோடியும் வழங்கவேண்டும்.

சட்டவிரோதமாக இயங்கி வரும் கல்குவாரிக்கு அனுமதி வழங்கிய கனிமவளத்துறை அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்.

இதேபோல் நெல்லை மாவட்டத்தில் இயங்கி வரும் ஏராளமான கல் குவாரிகளில் விதிமீறல்கள் உள்ளது. அந்த குவாரிகளில் ஆய்வு செய்து சீல் வைக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

அந்த மனுவை கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ் குமாரிடம் அளித்தனர். முன்னதாக அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Tags:    

Similar News