உள்ளூர் செய்திகள்
அமைச்சர் பொன்முடி

கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே நீட் தேர்வு- அமைச்சர் பொன்முடி பரபரப்பு பேச்சு

Published On 2022-05-16 06:06 GMT   |   Update On 2022-05-16 10:17 GMT
பிளஸ்2 மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசினார்.
சென்னை:

சென்னை பல்கலைக்கழகத்தின் 164வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-

இந்தியாவின் தலைச் சிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார். நீட் மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த ஆளுநருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், கல்வி மாநில உரிமையில் இருக்க வேண்டும் என்பதை ஆளுநரிடம் கோரிக்கையாக வைத்திருக்கிறேன்.

பிளஸ்2 மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவம், டிகிரி உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தபப்ட வேண்டும். நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் மாணவர்களுக்கு பயனளிக்காது. தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் உதவுகின்றன. 

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News