உள்ளூர் செய்திகள்
அண்ணா பல்கலைக்கழகம்

டான்செட் நுழைவுத்தேர்வு முடிவுகள் ஜூன் 10ந்தேதிக்குள் வெளியிடப்படும்- அண்ணா பல்கலைக்கழகம்

Update: 2022-05-16 05:16 GMT
டான்செட் நுழைவுத்தேர்வு முடிவுகளை ஜூன் 10ந்தேதிக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க், எம்.பிளான், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. போன்ற முதுகலை படிப்புகளில் சேர ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு என்று அழைக்கப்படும் டான்செட் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்த நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் முதுநிலை படிப்புகளில் சேர முடியும்.

2022ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. 14ந்தேதி எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகளுக்கும், நேற்று எம்.சி., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் படிப்புகளுக்கான தேர்வும் நடந்தன. சென்னை, மதுரை உள்பட 14 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தமிழகத்தில் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் டான்செட் நுழைவுத்தேர்வை எழுதினார்கள், டான்செட் நுழைவுத்தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

டான்செட் நுழைவுத்தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை வெளியிட அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜூன்) 10ந்தேதிக்குள் டான்செட் நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.Tags:    

Similar News