உள்ளூர் செய்திகள்
கும்பாபிஷேகம்

திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Update: 2022-05-15 10:48 GMT
காடுபட்டியில் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது
சோழவந்தான்

சோழவந்தான் அருகே காடுபட்டி உள்ள திரௌபதி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.இவ்விழாவை முன்னிட்டு 2 நாள் யாக பூஜை நடந்தது.நாகேஸ்வர சிவம்,குமரசிவம் ஆகியோர் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்தினர். 

அய்.பாண்டியன் தலை மையில், திண்டுக்கல் முன்னாள் எம்.பி. உதய குமார்,  பாலசுப்பிரமணியன், சோழவந்தான் பேரூராட்சி முன்னாள் சேர்மன் முருகேசன் ஆகியோர் முன்னி லையில், சிவாச்சாரி யார்கள் மேளதாளத்துடன் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபி ஷேகம் நடத்தினர்.

அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ராஜ பாண்டியன், துரை ப்பாண்டியன், முருகன், மணி கண்டன் உட்பட 4 பங்கா ளிகள் மற்றும் கிராமத்தார்கள்விழா ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் செய்திருந்தனர். காடுபட்டி சப்-இன்ஸ் பெக்டர் பால்ராஜ் தலை மையில் போலீசார் பாது காப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Tags:    

Similar News