உள்ளூர் செய்திகள்
திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் கட்டுமான ஆயத்த பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்ட ஆயத்த பணிகள் - அமைச்சர் ஆய்வு

Published On 2022-05-15 10:00 GMT   |   Update On 2022-05-15 10:00 GMT
திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான ஆயத்த பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், கொட்டையூர் துணை சுகாதார நிலையம் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளதையும், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு ரூ.9 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டப்படுவதற்கான ஆயத்த பணிகளையும் அமைச்சர்  மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர்செல்வவிநாயகம், எம்.எல்.ஏ.க்கள் பூண்டி.கே.கலைவாணன்,மாரிமுத்து, மாவட்ட ஊராட்சி தலைவர்கோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

 வலங்கைமான் வட்டம் கொட்டையூர் கிராமத்தில்ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளதை அமைச்சர் பார்வையிட்டு, மருத்துவ வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து ரூ.9 கோடி மதிப்பீட்டில் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையின் கூடுதல் கட்டடம் 2184 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளங்களில் அமையவுள்ள சிறு அறுவை சிகிச்சை அரங்கம், அறுவை சிகிச்சை பிரிவு, நுண்கதிர் பரிவு, சி.டி.ஸ்கேன், அறுவை சிகிச்சைக்கு முன் மற்றும் பின் கவனிப்பு அறை, மருத்துவ வார்டு மற்றும் செவிலியர் அறை ஆகியவற்றுடன் கூடிய அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான ஆயத்த பணிகளையும்  ஆய்வு செய்து, பொறியாளர்களிடம் கட்டுமான பணிகளின் முதற்கட்ட பணிகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

கொரடாச்சேரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான கள ஆய்மேவையும் அவர் மேற்கொண்டார்.

நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் மரு.ஹேமசந்காந்தி, வருவாய் கோட்டாட்சியர்கள்மன்னார்குடி அழகிரிசாமி,திருவாரூர்பாலசந்திரன், திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர்கவிதா பாண்டியன், திருத்துறைப்பூண்டி ஒன்றியக்குழு தலைவர்பாஸ்கரன், வலங்கைமான் ஒன்றியக்குழு உறுப்பினர்அன்பரசன்  உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News