உள்ளூர் செய்திகள்
மாணவி ஒருவருக்கு ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு பணி நியமன ஆணை வழங்கினார்.

எப்.எக்ஸ். கல்லூரி மாணவர்கள் 81 பேருக்கு பணி நியமன ஆணை

Update: 2022-05-14 10:00 GMT
நெல்லை எப்.எக்ஸ். கல்லூரியில் வளாகத் தேர்வு நடைபெற்றது. இதில் தேர்வான மாணவர்கள் 81 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
நெல்லை:

ஸ்காட் கல்வி குழுமங்களின் நிறுவனர் கிளிட்டஸ் பாபு நிருபர்களி டம் கூறியதாவது:-

டி.சி.எஸ். நிறுவனம் இந்தாண்டு நடத்திய தேசிய அளவிலான வேலை வாய்ப்புக்கான தேர்வில் வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவர்கள் 81 பேர் தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்புக்கான பணி நியமன ஆணைகளை பெற்றுள்ளனர்.

இதன் மூலம் அவர்கள் வளமான எதிர்காலம் அடைந்துள்ளனர். மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப இஷ்டப்பட்ட இடங்களில் வேலைவாய்ப்பும் அல்லது வீட்டில் இருந்தே பணி புரியும் மற்றொரு வாய்ப்பும் டி.சி.எஸ். நிறுவனத்தில் வழங்கப்பட இருக்கிறது. 

இறுதி ஆண்டு படிக்கும் போதே வேலைவாய்ப்புக்கு பின் கிடைக்கும் அனைத்து அனுபவங்களும், பயிற்சி களும் கல்லூரியிலேயே கிடைத்து விடுவதால் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கிறது.

பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி அகில இந்திய தொழில்நுட்ப அடல் தரவரிசை பட்டியலில் எக்ஸலன்ட் பேண்ட் இடத்தையும், இந்திய கல்வி அமைச்சகத்தின் புதிய  கண்டுபிடிப்புகளுக்கான தர வரிசைப்பட்டியலில் அதிகபட்சமான இட மான 4 நட்சத்திர அந்தஸ்தும், பன்னாட்டு நிறுவனங்களுடன் சிறப்பாக இணைந்து பணியாற்றியதற்காக அகில இந்திய தொழில்நுட்ப கழகம் பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து நடத்திய சர்வேயில் பிளாட்டினம் அந்தஸ்தும் பெற்றுள்ளது. 

தேசிய அளவிலான டி.சி.எஸ். தேர்வில் கிராமப்புற மாணவர்களை வெற்றி பெற வைத்து இந்த கல்லூரி சாதனையை நிகழ்த்தி உள்ளது. இறுதி ஆண்டு பயிலும் 274 மாணவர்கள் ஏற்கனவே வேலைவாய்ப்பு பெற்று சம்பளத்துடன் தேர்வாகி உள்ள நிறுவனங்களில் பயிற்சி பெற்று வருகின்றனர். 

இவ்வாறு அவர் கூறினார். 

படிக்கும் போதே மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று தரும் திட்டத்தை வெற்றி கரமாக செயல்பட்டு வரும் கல்லூரி பொது மேலாளர்  (வளர்ச்சி) ஜெயக்குமார், பொது மேலாளர் (நிர்வாகம்) கிருஷ்ணகுமார், முதல்வர் வேல்முருகன், வேலைவாய்ப்பு துறை டீன் ஞான சரவணன், பயிற்சி துறை டீன் பாலாஜி, தொழில் முனைவோர் துறை இயக்குனர் லூர்டஸ் பூபால ராயன், கல்வி சார்துறை பேராசிரியர் பிரியா, வளாக மேலாளர் சகாரியா கபிரியேல், பேராசிரியர்கள் தொலை தொடர்பு துறை கரோலின், டேவிட் ஐலிங், ஜாஸ்பெர் ஞானசந்திரன், முக்கிய நிர்வாகிகள், துறை  தலைவர்கள் மற்றும் பேராசிரியர்களை கல்லூரி நிறுவனர் கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குனர் அருண் பாபு ஆகியோர் பாராட்டினர். 
Tags:    

Similar News