உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

அஞ்சூர் வைரம்மன் கோவிலில் பொங்கல் விழா

Update: 2022-05-11 09:28 GMT
கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடித்து முககவசம் அணிந்து வந்த பக்தர்களுக்கு சமூக இடைவெளியுடன் பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பூர்:

முத்தூர் அருகே உள்ள அஞ்சூர் வைரம்மன், கன்னிமார் கருப்பணசாமி கோவிலில் சித்திரை மாத பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பக்தர்கள் கோவிலில் இருந்து புறப்பட்டு கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

பின்னர் வைரம்மன், கன்னிமார் கருப்பணசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், காவிரி தீர்த்தம் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புதிய பட்டாடை உடுத்தப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை பூஜை நடைபெற்றது. 

முடிவில் தமிழக அரசின் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடித்து முககவசம் அணிந்து வந்த பக்தர்களுக்கு சமூக இடைவெளியுடன் பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கோவில் வைர குலத்தவர்கள், பக்தர்கள், சுற்றுவட்டார கிராம பகுதி பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News