உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பேட்டை-பாளையில் தூக்குப்போட்டு இளம்பெண்கள் தற்கொலை

Update: 2022-05-10 09:57 GMT
பேட்டை, பாளையில் 2 இளம்பெண்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
நெல்லை:

பேட்டை ராஜூவ்காந்தி நகரை சேர்ந்தவர் காஜாமைதீன். எலக்ட்ரீசியன். இவரது மனைவி யாஸ்மின் (வயது 33). இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கிடைேய அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

 இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் யாஸ்மின் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். சம்பவ இடத்திற்கு பேட்டை போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாளை ரெயில்வேபீடர் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன். பால் வியாபாரி.

இவரது மனைவி சத்யமாலா (31). மணிகண்டன் அம்பையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு இன்று காலை வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டில் சத்யமாலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News