உள்ளூர் செய்திகள்
சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி மணலி மண்டல அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

Update: 2022-05-10 09:36 GMT
தமிழகத்தில் தி.மு.க. அரசு ஓராண்டில் செய்துள்ள பல்வேறு சாதனை திட்டங்களை பாராட்டும் வகையில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவொற்றியூர்:

சென்னை மாநகராட்சி 2வது மண்டலம் மணலி மண்டல கூட்டம் தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. உதவி கமிஷனர் கோவிந்த ராஜ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை, மெட்ரோ வாட்டர், மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழகத்தில் தி.மு.க. அரசு ஓராண்டில் செய்துள்ள பல்வேறு சாதனை திட்டங்களை பாராட்டும் வகையில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மணலி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 5 இடங்களில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் பூங்காக்கள் அமைப்பது ரூ.20 கோடி மதிப்பீட்டில் சாலைகள் போடுதல், மின் விளக்குகளை பராமரித்தல் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களை பழுதுபார்த்தல், புதிய பள்ளி கூடங்கள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர் காசிநாதன், ராஜேந்திரன், நந்தினி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ராஜேஷ் சேகர், ஸ்ரீதர் காங்கிரஸ் கவுன்சிலர் தீர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News