உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

திருப்பூருக்கு அணை மீன்கள் வரத்து அதிகரிப்பு

Published On 2022-05-10 07:26 GMT   |   Update On 2022-05-10 07:26 GMT
வழக்கமாக, 70 முதல் 80 டன் விற்பனைக்கு வரும். கடந்த இரு வாரங்களாக 30 முதல் 40 டன் மீன் மட்டுமே வருகிறது.
திருப்பூர்:

மீன்பிடிதடை காலம் அமலில்  இருப்பதால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்வதில்லை. தமிழக கடலோர பகுதியில் இருந்து மீன்கள் வரத்து திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு வெகுவாக குறைந்து விட்டது.வழக்கமாக, 70 முதல் 80 டன் விற்பனைக்கு வரும். 

கடந்த இரு வாரங்களாக 30 முதல் 40 டன் மீன் மட்டுமே வருகிறது. மீன்கள் விலை கிலோவுக்கு 50 முதல் 100 ரூபாய் வரை உயர்ந்துவிட்டது. மீன் வியாபாரிகள் நடப்பு வாரம் டேம் மீன்களை அதிக அளவில் கொள்முதல் செய்தனர். டேம் மீன்களான கட்லா, ரோகு மீன்கள் அதிகமாக வருகின்றன. மீன்கள் விலை உயர்வு, முகூர்த்த தினம் ஆகிய காரணங்களால், எதிர்பார்த்த விற்பனை இல்லையென மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News