உள்ளூர் செய்திகள்
1008 திருவிளக்கு பூஜை

கொட்டாரம் பெருமாள்புரம் வெட்டிமுறிச்சான் இசக்கி அம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை

Update: 2022-05-06 09:45 GMT
கொட்டாரம் பெருமாள்புரம் வெட்டிமுறிச்சான் இசக்கி அம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜையை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
கன்னியாகுமரி:

கொட்டாரம் பெருமாள்பு ரத்தில் அமைந்து உள்ளது ஸ்ரீ வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன் திருக்கோவில். இந்த கோவிலில் சித்திரை பெருந்திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது. 

திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், மெல்லிசைகச்சேரி, பரத நாட்டியம், பட்டிமன்றம் உள்பட பல்வேறு நிகழ்ச்சி கள் நடைபெற்று வருகின்றன. 

9-ம் திருவிழாவான நேற்று மாலை 6-30 மணிக்கு மூலஸ்தானத்தில் உள்ள வெட்டிமுறிச்சான் இசக்கியம்மனுக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் இரவு 7 மணிக்கு பெண்கள் 1008 திருவிளக்கு பூஜை நடத்தினார்கள். இதில் பெருமாள்புரம், அஞ்சுகிராமம், காணிமடம், முகிலன்குடியிருப்பு, இடைய ன்விளை, பஞ்சலிங்கபுரம், அகஸ்தீஸ்வரம் உள்பட 60-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு பூஜையை நடத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு அறங்காவலர் குழு தலைவர் முன்னாள் ராணுவ வீரர் ராஜதுரை தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் ரவீந்திரன், மற்றும் பாலையா நாடார், டி.கே.எஸ்.கண்ணன், பி.மகாலிங்கம், இ.ராமகிருஷ்ணன், தங்கராஜ், நாகராஜன், அருண், ஐயப்பன், பூசாரி அனீஷ்குமார்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி 1008 திருவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து பெருமாள்புரம் பானுமதி ராமகிருஷ்ணன் வாத்தியார் விளை விஜிலா குமாரராஜா, பெருமாள்புரம் புவனேஸ்வரி விஜய்ஆ கியோரும்குத்து விளக்கு ஏற்றினார்கள். 

இந்தநிகழ்ச்சியில் தொழில்அதிபர் என்ஜினீ யர்அய்யாவு நாடார், அகஸ்தீஸ்வரம்ஒன்றியஅ.தி.மு.க. செயலாளர்ஜெஸீம், பேரூர் கழக செயலா ளர்கள் ஆடிட்டர் சந்திர சேகரன், சிவபாலன், வீரபுத்திர பிள்ளை, ராஜபாண்டியன், தாமரைதினேஷ், தலைமை கழக பேச்சாளர் தாணுலிங்கம்,

கொட்டாரம் பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலர் ராமகிருஷ்ணன், பஞ்சலிங்கபுரம் ஊராட்சி கழக முன்னாள் செயலாளர் கண்ணன், மாவட்ட இளைஞர் பாசறை துணை செயலாளர் பாலமுருகன், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலர் வைத்தியநாதன், 

பா.ஜ.க. மாவட்ட செயலாளர் வளையாபதி ஸ்ரீ சுயம்பு, மீன்வளத்துறையைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், அரசு ஒப்பந்ததாரர் நாடான்குளம் குமாரசுவாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இதற்கிடையில் நாகர்கோ வில் மாநகராட்சி மேயர் மகேஷ், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தாமரைபாரதி, கொட்டாரம் பேரூர் கழக செயலாளர் வைகுண்டபெருமாள், உள்பட பலர்  பெருமாள்புரம் வெட்டிமுறிச்சான் இசக்கி அம்மன் கோவிலில் நடந்த பூஜையில் கலந்து கொண்டனர். 

அதன் பின்னர் இரவு 8 மணிக்கு அம்மனுக்கு பூஜையும் 8-15 மணிக்கு அன்னதானமும் நடந்தது. 10-ம் திருவிழாவான இன்று (6-ந் தேதி) அதிகாலை 5-30 மணிக்கு மூலஸ்தானத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் 6-30 மணிக்கு அம்மனுக்கு பூஜையும் 11 மணிக்கு மூலஸ்தானத்தில் உள்ள அம்மனுக்கு பூஜையும் மதியம்12-45 மணிக்குஅம்மனுக்குதீபாராதனையும்1மணிக்கு சமபந்தி விருந்தும் நடந்தது. 

இரவு 7 மணிக்கு நையாண்டி மேளமும் 7-30 மணிக்கு சமபந்தி விருந்தும் 9 மணிக்கு மகுட கச்சேரியும் நள்ளிரவு 12 மணிக்கு மூலஸ்தானத்தில் அம்மனுக்கு அலங்கார பூஜையும் நடக்கிறது. 

அதைத்தொடர்ந்து ஸ்ரீவெட்டி முறிச்சான் இசக்கியம்மன் அதன் பரிவார தெய்வங்களோடு நையாண்டி மேளம், சிங்காரி மேளம், செண்டை மேளம் முழங்க கோவில் வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

நாளை (7-ந் தேதி) அதிகாலை 3 மணிக்கு சாமி சாஸ்தாவுக்கு பூஜையும் 3-30 மணிக்கு இசக்கி அம்மனுக்கு பூஜையும் 5-30 மணிக்கு சுடலை மாடசுவாமிக்கு தீபாராதனையும் நடக்கிறது. காலை 6-30 மணிக்கு சமபந்தி விருந்து நடக்கிறது.

திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கொட்டாரம் பெருமாள்புரம் ஸ்ரீ வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராஜதுரை,  செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் ரவீந்திரன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் டி.கண்ணன், நாகராஜன், ஏ.கண்ணன், மோகன், அருள் குமார், லிங்கம், ரதீஸ், மனோஜ்ராஜன், ரோவின்ராஜ், சபரீஸ் மற்றும் திருப்பணிக் குழு உறுப்பினர்கள் செல்லையா, ஆதித்தன், தங்கவேல், மணி கண்டன், பூசாரி அனீஸ்குமார், ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News