உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

மரம் விழுந்ததில் முதியவர் மரணம்

Update: 2022-05-06 09:28 GMT
மரம் விழுந்ததில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி:

முசிறி மலையப்பா புரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்( வயது 95) . இவர் சம்பவத்தன்று  பழைய பஸ் நிலையத்தில் உள்ள டீ கடைக்குச் சென்று டீ குடித்துவிட்டு  வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கிருந்த முருங்கைமரம் ஒடிந்து, இவர் மீது விழுந்தது. இதில் காயம் அடைந்த அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.    
    

Tags:    

Similar News