உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வெளியீடு

Update: 2022-05-06 05:02 GMT
தொடர்ச்சியாக அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடப்பதை தடுக்கும் வகையில்முழு அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் 2-ந்தேதி குழந்தை திருமண தடை சட்டம் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் அறிமுகம் செய்யப்பட்டன.

தொடர்ச்சியாக அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா, குழந்தை திருமண தடை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

நிகழ்ச்சியில் கூடுதல் எஸ்.பி.,மோகன், திட்ட இயக்குனர் லட்சுமணன், தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் மலர்க்கொடி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார பணிகள் இணை இயக்குனர் சந்தோஷ், ஒருங்கிணைந்த  குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மரகதம், மரியாலயா, 'சிசெட்', சைல்டு லைன் மற்றும் 'சேவ்' தொண்டு நிறுவன நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News