உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

தொட்டியத்தில் சாலை விழிப்புணர்வு பேரணி

Update: 2022-05-05 09:41 GMT
தொட்டியத்தில் சாலை விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.
திருச்சி:

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணி தொட்டியம் தாலுகா அலுவலகத்தில் இருந்து துவங்கிய இந்த பேரணியை முசிறி கோட்டாட்சியர் த.மாதவன் கொடியசைத்து துவக்கிவைத்தார்.

பேரணிக்கு முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் எஸ்.அருள்மணி, தொட்டியம் வட்டாட்சியர்எஸ்.சத்யநாராயணன்

 தொட்டியம் காவல் ஆய்வாளர் எஸ்.மோகன்ராஜ் மோட்டார் வாகன ஆய்வாளர் எஸ்.குண்டுமணி முன்னிலை வகித்தனர்.

விழிப்புணர்வு பேரணியில் கொங்குநாடு கல்லூரியின் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசத்தின் அவசியம் குறித்து பாதகைகள் கோஷங்கள் எழுப்பி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்  

பேரணியில் தொட்டியம் பகுதி காவலர்கள், போக்குவரத்துகாவல் பணியாளர்கள், தொட்டியம் வட்ட அனைத்து வணிகர்கள் சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News