உள்ளூர் செய்திகள்
பழுதடைந்து கிடந்த சாலையை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள்.

வாழப்பாடியில் பழுதடைந்த சாலை சீரமைப்பு

Update: 2022-05-05 08:35 GMT
வாழப்பாடியில் பழுதடைந்த சாலை சீரமைக்கப்பட்டது.
வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முக்கிய மையமாக உள்ளது. இங்குள்ள கடலூர் சாலை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில்  பயணிகள் கடலூர் சாலையில் வாழப்பாடிக்கு வந்து செல்கின்றனர்.

சேலம்-உளுந்தூர்பேட்டை இடையே 4 வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும்போது, வாழப்பாடியில் கடலூர் சாலையை விரிவுபடுத்தாமல், முத்தம்பட்டியில் இருந்து மத்தூர் வரையிலான 4 கி.மீ. தூரத்திற்கு இருவழி புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. 

இதன்பிறகு, வாழப்பாடி நகருக்குள் துண்டாக நின்று போன கடலூர் சாலையை, தேசிய நெஞ்சாலைத்துறை பராமரிக்கவில்லை. இச்சாலை குண்டும் குழியுமாக பழுதடைந்து கிடப்பதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதோடு, போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. 

இது பற்றிய செய்தி கடந்த 21-ந்தேதி  மாலைமலர் நாளிதழில் வெளியானது.  இதையடுத்து வாழப்பாடியில் பழுதடைந்து கிடந்த கடலூர் சாலையில் குண்டும் குழியுமாக இருந்த இடங்களில் மட்டும், நேற்று முன்தினம் நெடுஞ்சாலைத் துறையினர் ‘பேட்ச் ஒர்க்’ செய்துள்ளனர். 

இதனால் தற்காலிக தீர்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், சாலையில் பழுதடைந்த இடங்களில் அவ்வப்போது பேட்ச் ஒர்க் மட்டுமே செய்வதை தவிர்த்து விட்டு, சாலையை விரிவுபடுத்தி முழுமையாக புதுப்பிக்கவும், தடுப்பு சுவர், நடைபாதை மேம்பாலம் அமைக்கவும் நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News