உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் காலபைரவர் கோவிலில் சங்காபிஷேக விழா

Update: 2022-05-05 05:57 GMT
கோவிலின் ஆண்டு விழாவை முன்னிட்டு, லட்சார்ச்சனை மற்றும் 108 வலம்புரி சங்காபிசேக விழா நடைபெற்றது.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி மலையம்பாளையத்தில், வடுகநாதசாமி என்னும் காலபைரவர் கோவில் உள்ளது. கோவிலின் ஆண்டு விழாவை முன்னிட்டு, லட்சார்ச்சனை மற்றும் 108 வலம்புரி சங்காபிசேக விழா நடைபெற்றது.

விநாயகர் வழிபாட்டுடன் துவங்கிய வேள்வி வழிபாடு நிகழ்ச்சிகள், லட்சார்ச்சனை, 108 வலம்புரி சங்காபிசேகம், பேரொளி வழிபாடு, மற்றும் அன்னதானம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சங்காபிசேக வழிபாடு நிகழ்ச்சிகளை பழனி ஆதீனம் சாது சண்முக அடிகளார் நடத்திவைத்தார்.

சங்கு தீர்த்தத்தின் மகிமை என்ற தலைப்பில் வாவிபாளையம் அனந்த கிருஷ்ணன் சொற்பொழிவாற்றினார். இந்த விழாவில் கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News