உள்ளூர் செய்திகள்
சாலை விதிகளை கடைபிடிப்பது குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய போது

மே தினவிழா நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

Published On 2022-05-02 10:08 GMT   |   Update On 2022-05-02 10:08 GMT
பரமத்தி வேலூரில் மே தினவிழா நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, மோட்டார் சைக்கிள் மற்றும் மெக்கானிக் சங்கம் சார்பில் நடைபெற்ற மே தினவிழா நிகழ்ச்சியில் சாலை விதிகளை கடைபிடிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். செயலாளர் பொன்னம்பலம் முன்னிலை வகித்தார்.  

விழாவில் பரமத்திவேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன், பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள், முன்னாள் அரசு வழக்கறிஞர் லோகநாதன், சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சாலை விதிகளை கடைபிடிப்பது, 

ஹெல்மெட் அணிவதன் அவசியம்,இளம் சிறார்கள் வாகனங்களை ஓட்டுவதால் அதிகரித்து வரும் விபத்துகளை தடுப்பது ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

அதனை தொடர்ந்து சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. முடிவில் சங்க பொருளாளர் சுப்ரமணி நன்றி கூறினார்.
Tags:    

Similar News