உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைவால் பழங்கள் விலை அதிகரிப்பு

Published On 2022-05-02 08:51 GMT   |   Update On 2022-05-02 08:51 GMT
மாதுளை, ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை, கிர்ணி உள்ளிட்ட பழங்களின் வரத்து குறைந்து வருகிறது.

போரூர்:

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 150க்கும் மேற்பட்ட லாரிகளில் பழங்கள் தினசரி விற்பனைக்கு வருகிறது.

சீசன் முடிந்து விட்டதால் மாதுளை, ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை, கிர்ணி உள்ளிட்ட பழங்களின் வரத்து குறைந்து வருகிறது. அதேபோல் சீசன் தொடங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் விளைச்சல் பாதிப்பு காரணமாக மாம்பழத்தின் வரத்து அதிகளவில் இல்லை.

வரத்து குறைவால் கடந்த மாதம் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.240க்கு விற்ற மாதுளை ரூ.280க்கு அதிகரித்து உள்ளது. சில்லரை விற்பனை கடைகளில் மாதுளை ஒரு கிலோ ரூ.350 வரை விற்கப்படுகிறது. ஆப்பிள்ரூ.180, ஆரஞ்சுரூ.75, சாத்துக்குடிரூ.50க்கும் விற்பனை ஆகிறது.

அதேபோல் பன்னீர் திராட்சை ரூ.55க்கும், கருப்பு திராட்சை ரூ.50க்கும், தர்பூசணி ரூ.12க்கும், கிர்ணி பழம் ரூ.15க்கும் விற்கப்படுகிறது.

வரத்து குறைவுகாரணமாக பழங்கள் விலை அதிகரித்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இன்றைய பழங்கள் மொத்த விற்பனை விலை விபரம் வருமாறு (கிலோவில்) : சாத்துக்குடிரூ.50, இத்தாலி ராயல்கலா ஆப்பிள்ரூ180, நியூசிலாந்து ராயல்கலா ஆப்பிள் ரூ.235, ஆரஞ்சுரூ.75, மாதுளைரூ.280, அண்ணாசி பழம் ரூ.30, தர்பூசணிரூ.12, சப்போட்டாரூ.35, பப்பாளிரூ.20, பன்னீர்திராட்சைரூ.55, கருப்பு திராட்சைரூ50, பச்சை திராட்சைரூ.70, கிர்ணிரூ.15, வரி கிர்ணிரூ.20, கொய்யாரூ.24.

Tags:    

Similar News