உள்ளூர் செய்திகள்
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

தேர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி

Published On 2022-04-30 09:10 GMT   |   Update On 2022-04-30 09:10 GMT
தஞ்சை அருகே களிமேட்டில் தேர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேசன் கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு சமூகப்பணிகளை ஏழை எளிய மக்களுக்கு ஆற்றி வருகிறது.

சமீபத்தில் தஞ்சையை அடுத்துள்ள களிமேடு கிராமத்தில் நடந்த அப்பர் சுவாமி தேர் திருவிழாவில் ஏற்பட்ட விபத்தில் பலியான குடும்பங்களுக்கு மதர் தெரசா பவுண்டேசன் சேர்மென் சவரிமுத்து, அறங்காவலர்கள் மற்றும் அலுவலர்கள் பலியானவர்களின் ஒவ்வொரு குடும்பங்களையும் நேரிடையாக சந்தித்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். 

பாதிக்கப்பட்ட குடும்பங்களில் பலியானோர் பெரும்பாலும் வருமானம் ஈட்டுபவர்களாக இருந்தது குறிப்பிடதக்கது.

அவர்கள் இழப்பினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வாழ்வாதாரம் ஒரு கேள்விக்குறியானது. அந்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன.

 தேவையான அரிசி, மளிகைப்
அவர்கள் குடும்பங்களிலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் குழந்தைகளுக்குத் தேவையான கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்றும் அவர்களில் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தினரை முழுமையாக தத்தெடுத்துக் கொள்வதாகவும் சேர்மென் சவரிமுத்து உறுதியளித்தார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை பவுண்டேசன் சேர்மென் தலைமையில் தஞ்சாவூர் பெரியகோவில் சதயவிழா குழு தலைவர் களிமேடு செல்வம் முன்னிலையில் திட்ட இயக்குநர் ரத்தீஷ்குமார், 

நிர்வாக மேலாளர் மெர்சி, தளவாட மேலாளர் ஜெரோம், மக்கள் தொடர்பு அலுவலர்கள் நாகராணி, விஜி மற்றும் தன்னார்வ தொண்டர்கள் வினோதினி, கிறிஸ்டி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
Tags:    

Similar News